இந்தியா

வேகமாகக் குறையும் நிலத்தடி நீர் மட்டம் : தண்ணீர் பஞ்சம் வராமல் இருக்க வழி சொல்லும் ஜல்சக்தி துறை அமைச்சர்

வேளாண் துறையில் 10% அளவிற்குத் தண்ணீரை சேமிப்பதன் மூலம் நாட்டில் அடுத்த 50 ஆண்டுகளுக்கு நீர் பற்றாக்குறையை குறைக்க முடியும் என மத்திய ஜல்சக்தித் துறை அமைச்சர் கஜேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

வேகமாகக் குறையும் நிலத்தடி நீர் மட்டம் : தண்ணீர் பஞ்சம் வராமல் இருக்க வழி சொல்லும் ஜல்சக்தி துறை அமைச்சர்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் மிகவும் ஆழத்திற்குச் சென்று ஆபத்தான நிலையில் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஜல்சக்தி துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சுமார் 22% அளவிற்கு நிலத்தடி நீர்மட்டம் கீழிறங்கி விட்டது. தமிழ்நாட்டில் 541 பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் ஆபத்தான நிலையில் அதிக ஆழத்திற்குச் சென்றுவிட்டது.

அடுத்தபடியாக ராஜஸ்தானில் 218 பகுதிகளிலும், உத்திரப் பிரதேசத்தில் 139 பகுதிகளிலும், தெலுங்கானாவில் 137 பகுதிகளிலும், பஞ்சாப்பில் 111 பகுதிகளிலும், ஹரியானாவில் 81 பகுதிகளிலும் நிலத்தடி நீர்மட்டம் ஆழத்திற்குச் சென்றுவிட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேகமாகக் குறையும் நிலத்தடி நீர் மட்டம் : தண்ணீர் பஞ்சம் வராமல் இருக்க வழி சொல்லும் ஜல்சக்தி துறை அமைச்சர்

இந்நிலையில், வேளாண்துறையில் 10% அளவிற்கு தண்ணீரை சேமிப்பதன் மூலம் நாட்டில் அடுத்த 50 ஆண்டுகளுக்கு நீர் பற்றாக்குறையை குறைக்க முடியும் என மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

மேலும், வேளாண்துறைக்கு தற்போது 89% தண்ணீர் பயன்படுத்தப்படுவதாகவும், விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு நீர்த்தெளிப்பானை பயன்படுத்த ஊக்கமளித்தால், நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாக்கலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories