இந்தியா

விடுதிக் கட்டணத்தை உயர்த்திய JNU நிர்வாகம் : போராடிய மாணவர்கள் மீது போலிஸ் வன்முறை வெறியாட்டம் (video)

பல மடங்கு உயர்த்தப்பட்ட கல்வி மற்றும் விடுதிக் கட்டணங்களை குறைக்கக்கோரி நாடளுமன்றம் நோக்கி பேரணி நடத்திய ஜே.என்.யூ மாணவர்களைக் காவல்துறையினர் கடுமையாக தாக்கியுள்ளனர்.

விடுதிக் கட்டணத்தை உயர்த்திய JNU நிர்வாகம் : போராடிய மாணவர்கள் மீது போலிஸ் வன்முறை வெறியாட்டம் (video)
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

உயர்த்தப்பட்ட விடுதி கட்டண உயர்வைத் திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லி ஜே.என்.யூ மாணவர்கள் இன்று நாடாளுமன்றத்தின் முன் பேரணியில் ஈடுபட்டனர்.

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் விடுதி கட்டணத்தை சுமார் 400 சதவீதமாக அதிகரித்து பல்கலைக்கழக நிர்வாகம் கடந்த சில தினங்களுக்கு முன் அறிவித்தது. அதுமட்டுமின்றி, போராடும் மாணவர்களை ஒடுக்குவதற்காக அபராதம் வசூலிக்கும் முறையையும், மாணவர்களுக்கு ஆடை கட்டுப்பாட்டையும் விதித்து ஜே.என்.யூ நிர்வாகம் உத்தரவிட்டது.

பல்கலைக்கழகத்தின் இத்தகைய உத்தரவுக்குக் கடும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், கடந்த வாரம் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு பங்கேற்ற பட்டமளிப்பு விழாவைப் புறக்கணித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராடும் மாணவர்களை ஒடுக்கும் விதமாக டெல்லி போலிஸார் மேற்கொண்ட சில நடவடிக்கை மாணவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

மாணவர்களின் தொடர் போராட்டத்தைத் தொடர்ந்து உயர்த்தப்பட்ட விடுதி கட்டணத்தைப் பாதியாகக் குறைப்பதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்தது. ஆனாலும் மாணவர்கள் முழுமையாக கட்டண உயர்வைத் திரும்ப பெறவேண்டும் கோரிக்கை வைத்தனர்.

இதற்கு நிர்வாகம் செவி சாய்க்காததால் மாணவர் அமைப்பினர் ஒன்றிணைந்து நாடாளுமன்றத்தை முற்றுகையிடுவது என முடிவு செய்து போராட்டத்தை இன்று துவங்கினர். இந்தப் பேரணியின் போது மாணவர்களை நாடாளுமன்ற வீதிகளில் நுழையவிடாமல், போலிஸார் இரும்பு தடுப்புகள் கொண்டு தடுத்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் போலிஸாரின் தடுப்புகளை மீறி செல்ல முயன்றனர். அப்போது போலிஸாருக்கும் மாணவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

மேலும் சில மாணவர்களைப் போலிஸார் வழுக்கட்டாயமாக இழுத்துச் சென்றனர். இதில் பல மாணவர்கள் காயம் அடைந்துள்ளனர். இதனால் நாடாளுமன்ற சாலையில் பதற்றமான சூழல் உருவாகியது. மாணவர்கள் தாக்கப்பட்டதற்கு நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்துள்ளது.

banner

Related Stories

Related Stories