இந்தியா

''பிராமணர்கள் தங்கள் பிறப்பின் காரணமாக உயர்ந்த மதிப்பில் உள்ளனர்''-சர்ச்சையை கிளப்பிய சபாநாயகரின் பேச்சு

பிராமணர்கள் தங்கள் பிறப்பின் காரணமாக சமூகத்தில் எப்போதும் உயர்ந்த நிலையில் இருக்கிறார்கள் என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கூறிய கருத்து கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

''பிராமணர்கள் தங்கள் பிறப்பின் காரணமாக உயர்ந்த மதிப்பில் உள்ளனர்''-சர்ச்சையை கிளப்பிய சபாநாயகரின் பேச்சு
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், ''மற்ற சமுதாய பிரிவினர்களை பிராமணர்கள் எப்போதும் வழிநடத்தி வருகின்றனர். நாட்டில் அவர்களுக்கு எப்போதும் வழிநடத்திச் செல்லும் பணி இருந்துள்ளது.

சமுதாயத்தில் கல்வியையும் மதிப்புகளையும் பரப்புவதில் எப்போதும் அது பங்காற்றுகிறது. இன்றும் கூட ஒரு பிராமண குடும்பம் ஒரு கிராமத்திலோ அல்லது ஒரு குடிசையிலோ வாழ்ந்தாலும், அந்த பிராமண குடும்பம் எப்போதும் அதன் அர்ப்பணிப்பு மற்றும் சேவையின் காரணமாக ஒரு உயர் நிலையிலேயே இருக்கிறது. ஆகவே, பிராமணர்கள் தங்கள் பிறப்பின் காரணமாக சமூகத்தில் உயர்ந்த மதிப்பில் உள்ளனர்” என தெரிவித்துள்ளார்.

மேலும், இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் சிலவற்றை பதிவிட்டுள்ளார். அவரது பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

காங்கிரஸ் மூத்த தலைவர் கபில்சிபல், ''பிறப்பால் பிராமணர்கள் சமுகத்தில் உயர்ந்த நிலையில் இருக்கிறார்கள் என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கூறியுள்ளது சமத்துவமற்ற இந்தியாவின் சாதிய மனநிலையை காட்டுகிறது'' என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த பேச்சிற்காக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மக்கள் மத்தயில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என குஜராத் எம்.எல்.ஏ ஜிக்னேஷ் மேவாணி தெரிவித்துள்ளார். மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிற்கு எதிராக ஜனாதிபதி ராம் நாத் கோவிந்திற்கு புகார் அனுப்புவதாக மக்கள் சிவில் லிபர்ட்டிஸ் யூனியன் தெரிவித்துள்ளது.

banner

Related Stories

Related Stories