இந்தியா

ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு செப்.,15 முதல் தடை: மத்திய அமைச்சர் ராம்விலாஸ் அறிவிப்பு!

செப்.,15ம் தேதி முதல் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளார் மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான்.

ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு செப்.,15 முதல் தடை: மத்திய அமைச்சர் ராம்விலாஸ் அறிவிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த செப்.,15 முதல் நாடுமுழுவதும் தடை விதிப்பதாக மத்திய உணவு மற்றும் நுகர்வோர் துறை அறிவித்துள்ளது.

டெல்லியில், மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தலைமையில் நடந்த உயர்மட்ட கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் உணவுத்துறையின் செயலாளர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

உணவுத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ், பொதுத்துறையின் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுக்கும் இந்த தடை உத்தரவு பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த தடையை முழுமையாக அமல்படுத்தும் வகையில், பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக துணி மற்றும் சணல் மூலம் தயாரிக்கப்பட்ட பைகளை உணவுத்துறை அதிகாரிகளுக்கு வழங்கவும் அமைச்சர் பஸ்வான் உத்தரவிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories