இந்தியா

சிக்கலில் ’பிரிட்டானியா’ பிஸ்கெட் நிறுவனம் : பொருளாதாரச் சரிவை சரிகட்ட விலையை உயர்த்த முடிவு ?

பிரிட்டானியா பிஸ்கெட் நிறுவனம் நிதிச்சுமையின் காரணமாக பிஸ்கெட் விலையை உயர்த்த முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

சிக்கலில் ’பிரிட்டானியா’ பிஸ்கெட் நிறுவனம் : பொருளாதாரச் சரிவை சரிகட்ட விலையை உயர்த்த முடிவு ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
பி.என்.எஸ்.பாண்டியன்
Updated on

பிரிட்டானியா பிஸ்கெட் நிறுவனம் பிஸ்கெட் மற்றும் ரொட்டி வகைகளை தயாரித்து வருகிறது. இந்த நிறுவனத்திற்கென தனித்துவமான வாடிக்கையாளர்கள் லட்சக்கணக்கில் உள்ளனர். இந்திய உணவுத்துறையில் மிக முக்கியமான நிறுவனமாக பிரிட்டானியா உள்ளது.

50க்கும் மேற்பட்ட வகைகளில் பிஸ்கெட், சாக்லெட் பிஸ்கெட் வகைகளை தயாரித்து சந்தைப்படுத்தும் இந்நிறுவனம் கடந்த ஆறு மாதங்களாக மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. பொருளாதார நெருக்கடி காரணமாக வருமான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியான தகவலின்படி, ஜி.எஸ்.டி வரியின் காரணமாக இந்த நிறுவனத் தயாரிப்புகளின் விற்பனை தொய்வடைந்துள்ளது. இதனை சமாளிக்க தனது தயாரிப்புகளின் விலையை உயர்த்த அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் தலைவர் வினய் சுப்பிரமணியன் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், "இந்த நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் விலைகள் சற்று உயரும், தற்போதைய நிதி நெருக்கடியை நிறுவனம் உன்னிப்பாக கண்காணித்து வருகிறது.

மழைக்காலம் பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிறுவனம் விலை உயர்வுடன் செலவு பொறிமுறையிலும் கவனம் செலுத்தும்” என்று கூறியுள்ளார். இந்திய சந்தையில் முப்பத்து மூன்று சதவீதம் இடம் பிடித்துள்ள பிரிட்டானியாவுக்கு இந்தியாவின் கிழக்கு பிராந்தியங்களில் அதிக வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

சந்தையில் பெரும் சதவீதத்தை ஆக்கிரமித்துள்ள பிரிட்டானியா தனது தயாரிப்புக்களின் விலையை உயர்த்தினால், மற்ற நிறுவனங்களும் விலையை உயர்த்தும் என்று பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.

ஏற்கனவே, பார்லே பிஸ்கெட் நிறுவனம் நிதிச்சிக்கலில் சிக்கியதன் விளைவாக 10 ஆயிரம் ஊழியர்களை பணியில் இருந்து நீக்க முடிவெடுத்துள்ளதாகத் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது. இந்த பொருளாதார சரிவுக்கு பா.ஜ.க அரசின் தவறான கொள்கை முடிவுகளே காரணம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories