இந்தியா

முன்னாள் முதல்வர் இறுதிச்சடங்கில் சுடாமல் போன 22 துப்பாக்கிகள் : கோபத்தில் முகம் சிவந்த முதலமைச்சர்

பீகார் முன்னாள் முதல்வர் ஜெகன்நாத் மிஸ்ராவின் இறுதிச் சடங்கின் போது குண்டு வெடிக்காததால் பரபரப்பு ஏற்பட்டது.

முன்னாள் முதல்வர் இறுதிச்சடங்கில் சுடாமல் போன 22 துப்பாக்கிகள் : கோபத்தில் முகம் சிவந்த முதலமைச்சர்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஐக்கிய ஜனதா தள கட்சியின் மூத்த தலைவரும், பீகார் மாநில முன்னாள் முதலமைச்சருமான ஜெகன்நாத் மிஸ்ரா கடந்த ஆக.,19ம் தேதி வயது மூப்பினால் ஏற்பட்ட உடல்நலக் குறைவால் காலமானார்.

அவரது உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடத்தப்படும் என பீகார் மாநில அரசு அறிவித்திருந்தது.

முன்னாள் முதல்வர் இறுதிச்சடங்கில் சுடாமல் போன 22 துப்பாக்கிகள் : கோபத்தில் முகம் சிவந்த முதலமைச்சர்

அதன்படி, ஜெகன்நாத்தின் சொந்த ஊரான சுபால் மாவட்டத்திலுள்ள பாலுபா பஸாரில் நேற்று இறுதிச் சடங்கு நடந்தது. மிஸ்ராவின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.

அப்போது அரசு மரியாதைகளில் ஒன்றான 22 குண்டுகள் (3 சுற்றுகளாக) முழங்கும் சடங்கும் நடந்தது. சிக்கல் என்னவென்றால், போலிஸார் சுட ஆயத்தமாகி, வானத்தை நோக்கி துப்பாக்கியின் விசையை அழுத்தியிருக்கிறார்கள். ஆனால் எந்த துப்பாகியில் இருந்தும் குண்டு வெடித்த சத்தம் கேட்கவில்லை.

அதிர்ச்சியடைந்த போலிஸார் துப்பாக்கிகளை சோதனை செய்து பார்த்துள்ளனர். எல்லாம் சரியாக இருந்தும் துப்பாக்கி இயங்காதது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்தால் கோபமுற்ற முதலமைச்சர் நிதிஷ்குமார், அனைத்து காவல் நிலையங்களிலும் உள்ள துப்பாக்கிகளின் நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய போலிஸ் டி.ஜி.பி-க்கு உத்தரவிட்டுள்ளார்.

முன்னாள் முதல்வர் இறுதிச்சடங்கில் சுடாமல் போன 22 துப்பாக்கிகள் : கோபத்தில் முகம் சிவந்த முதலமைச்சர்

மேலும், இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானதால் மாவோயிஸ்டுகள் அதிகமாக புழங்கக்கூடிய பீகார் மாநிலத்தில், போலிஸாரின் துப்பாக்கிகள் இயங்காமல் போனது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories