நடப்பு ஆண்டில் தென்மேற்கு பருவமழை இயல்பை விட அதிகமாக பெய்து வருகிறது. கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளான நீலகிரி ஆகிய பகுதிகளில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவுகளும், வெள்ளப்பெருக்குகளும் அதற்கு சாட்சியாக உள்ளது.
தென் மாநிலங்கள் மட்டுமல்லாமல் வடமாநிலங்களின் பெரும்பாலான பகுதிகளையும் பருவமழையால் ஏற்பட்ட இயற்கை பேரிடர்கள் விட்டு வைக்கவில்லை. ஏராளமான பகுதிகளில் மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இன்னும் கனமழைக்கான எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு வண்ணம் உள்ளது.
இந்நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ஆகஸ்ட் மாதத்தின் முதல் 18 நாட்களில் மிக கனமழை முதல் அதீத கனமழை வரை நாடுமுழுவதும் உள்ள 1,204 பகுதிகளில் பெய்துள்ளது. இது கடந்த 5 ஆண்டுகளில் பெய்யாத பருவமழைக்கான அளவு எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 120 மி.மீ முதல் 210 மி.மீ வரை பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்துள்ளது. இதற்கு முன்பு கடந்த 2015ம் ஆண்டு ஜூலை மாதம் 914 இடங்களில் மிக முதல் அதீத கனமழை பெய்துள்ளது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 3,500 இடங்களில் மிக கனமழை முதல் அதீத கனமழை பெய்துள்ளதகாவும், 2019ம் ஆண்டை பொருத்தவரை ஜூலை 22,23 ஆகிய நாட்கள் முதலே தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.