காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை அடுத்து நாட்டின் பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
காங்கிரஸ், தி.மு.க, திரிணாமுல், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் காஷ்மீர் அந்தஸ்து ரத்து குறித்த மத்திய பா.ஜ.க அரசின் அறிவிப்பு பலத்த எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், படிபடியாக ராணுவத்தை காஷ்மீரில் குவித்து வருகிறது மத்திய பா.ஜ.க அரசு. ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்துக்கான 370 மற்றும் 35ஏ சட்டப்பிரிவை நீக்கி மத்திய அரசு அறிவித்திருப்பது ஜனநாயக படுகொலை. ஜம்மு காஷ்மீரை 2 யூனியன் பிரதேசமாக பிரிப்பது வன்மையான கண்டனத்திற்குரியது என்று அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில் காஷ்மீர் மக்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்ததற்காக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முஃப்தி ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார். அதில் இக்கட்டான சூழ்நிலையில் காஷ்மீர் மக்களுக்கு ஆதரவாக பேசியிருப்பதற்கு நன்றி என பதிவிட்டுள்ளார்.