இந்தியா

‘ஜெய் ஸ்ரீ ராம்’ சொல்லச் சொல்லி முஸ்லிம் எம்.எல்.ஏ.,வை கட்டாயப் படுத்திய பா.ஜ.க அமைச்சர் (Video)

ஜார்கண்ட் மாநில சட்டமன்றத்துக்கு வெளியில் அம்மாநில அமைச்சர் அமைச்சர் சி.பி. சிங் காங்கிரஸ் முஸ்லிம் எம்.எல்.ஏ-வை, ஜெய் ஸ்ரீ ராம் சொல்லச்சொல்லி வற்புறுத்தி இருக்கிறார்.

 ‘ஜெய் ஸ்ரீ ராம்’ சொல்லச் சொல்லி  முஸ்லிம் எம்.எல்.ஏ.,வை கட்டாயப் படுத்திய  பா.ஜ.க அமைச்சர் (Video)
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

சமீபகாலமாக சிறுபான்மையினரை ‘ஜெய் ஸ்ரீ ராம்’ சொல்லச் சொல்லி தாக்கும் செய்திகள் தொடர் கதையாகி வருகின்றன. இந்நிலையில் பா.ஜ.க அமைச்சர் ஒருவர் காங்கிரஸ் எம்.எல்.ஏ ஒருவரை ‘ஜெய் ஸ்ரீ ராம்’ சொல்லச்சொல்லி வற்புறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தின், நகர்புற வளர்ச்சி, வீட்டு வசதி மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் சி.பி. சிங், நேற்று சட்டமன்றத்திலிருந்து வெளியே வந்ததும், அருகில் இருந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ இர்ஃபான் அன்சாரியை அழைத்து ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என சொல்லும்படி வற்புறுத்துகிறார். மேலும், உங்கள் முன்னோர் ராமர்தான். பாபர் அல்ல என்றும் கூறி இருக்கிறார்.

இதற்குப் பதிலளித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ, ராமரின் பெயரால் என்னை நீங்கள் அச்சம் கொள்ளச் செய்கிறீர்கள். ராமரின் பெயரைக் கெடுப்பதே நீங்கள்தான். நமக்கு வேண்டியதெல்லாம் மின்சாரம், வேலைவாய்ப்பு, தண்ணீர் போன்ற அடிப்படை வசதிகள் தான், இது இல்லை” என பதிலளித்துள்ளார்.

தொடர்ந்து, “உங்களை அச்சப்படுத்துவதற்கு அப்படி சொல்லவில்லை. உங்களின் முன்னோர்கள் ‘ஜெய் ஸ்ரீ ராம்' என்று சொன்னதை நீங்கள் மறக்க வேண்டாம். தைமூர், பாபர், கஜினி ஆகியோர் உங்களின் முன்னோர்கள் அல்ல. உங்கள் முன்னோர்கள் ராமரின் பக்தர்கள்” என்றார்.

ஜார்கண்ட் அமைச்சரின் இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அமைச்சர் சி.பி.சிங்கின் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக அம்மாநில பா.ஜ.க தெரிவித்துள்ளது.

முன்னதாக, நாட்டில் சிறுபான்மை மக்கள் மீது தொடர்ந்து நடத்தப்படும் தாக்குதல் சம்பவங்களை தடுக்க உறுதியான நடவடிக்கைகளை எடுக்குமாறு திரைப்பட இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories