இந்தியா

அவசர அவசரமாக நிறைவேற்றப்படும் மசோதாக்கள் : ராஜ்யசபா தலைவருக்கு எதிர்க்கட்சி எம்.பிகள் கடிதம்!

நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பப்படாமல் முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்படுவதற்கு எதிர்க்கட்சி எம்.பி-க்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

அவசர அவசரமாக நிறைவேற்றப்படும் மசோதாக்கள் : ராஜ்யசபா தலைவருக்கு எதிர்க்கட்சி எம்.பிகள் கடிதம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

மாநிலங்களவை எதிர்க்கட்சி எம்.பி.க்கள், நாடாளுமன்ற நிலைக்குழு தொடர்பாக வெங்கையா நாயுடுவுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

நாடாளுமன்றத்தில் முக்கிய மசோதாக்கள் போதிய விவாதங்கள் இன்றி அவசர அவசரமாக நிறைவேற்றப்படுவதாக 17 எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்.பி-கள் மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாடுயுடுவுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

நடப்பு மக்களவைத் தொடரில், என்.ஐ.ஏ சட்டத்திருத்த மசோதா, தகவல் அறியும் உரிமைச் சட்டத் திருத்த மசோதா உள்ளிட்ட 14 மசோதாக்கள் எவ்வித ஆய்வுக்கும் உட்படுத்தப்படாமல் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இந்த மசோதாக்கள் மீதான விவாதத்தின் போது, முக்கிய மசோதாக்களை நாடாளுன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பவேண்டும் என எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வலியுறுத்தினர். ஆனால், இதை மத்திய அரசு ஏற்க மறுத்தது. இதனால், நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பப்படாமலேயே மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.

அவசர அவசரமாக நிறைவேற்றப்படும் மசோதாக்கள் : ராஜ்யசபா தலைவருக்கு எதிர்க்கட்சி எம்.பிகள் கடிதம்!

இந்தநிலையில், இது தொடர்பாக மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு திருச்சி சிவா, வைகோ, உள்ளிட்ட 17 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடிதம் எழுதியுள்ளனர். அதில், நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பப்படாமல் முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்படுவதற்கு கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories