உத்தர பிரதேசத்தின் பாபர் மசூதி இடிப்பு வழக்கின் விசாரணையை முடிக்க மேலும் 6 மாதம் அவகாசம் கேட்டுள்ளது லக்னோ சிறப்பு நீதிமன்றம்.
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இருந்து பா.ஜ.க மூத்தத் தலைவர்களான முரளி மனோகர் ஜோஷி, அத்வானி, உள்ளிட்ட 19 பேரை விடுவிக்கப்பட்டதை எதிர்த்து சி.பி.ஐ மேல்முறையீடு செய்ததை விசாரித்த உச்ச நீதிமன்றம் அவர்களின் விடுதலை குறித்து மறு ஆய்வு செய்து 2019 ஏப்ரல் 19ம் தேதிக்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என 2017 ஏப்.,19ல் உத்தரவிட்டது.
விசாரணைக்கான 2 ஆண்டுகாலம் முடிவடைந்ததை ஒட்டி, உச்ச நீதிமன்றத்துக்கு எழுதிய கடிதத்தில் பாபர் மசூதி இடிப்பு வழக்கு இறுதி கட்டத்தை எட்டிய நிலையில் மேலும் 6 மாதம் அவகாசம் தேவை என கோரிக்கை விடுத்தது சிறப்பு நீதிமன்றம்.
சிறப்பு நீதிமன்ற நீதிபதியின் மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதி நாரிமன் அமர்வு முன் வந்த போது, சிறப்பு நீதிமன்றத்துக்கு கால அவகாசம் வழங்குவது குறித்து ஜூலை 19ம் தேதிக்குள் உத்தர பிரதேச அரசு பதிலளிக்க உத்தரவிட்டது.