1. Central Institute for Railway Information Systems
புதுடெல்லியில் உள்ள Central Institute for Railway Information Systems நிறுவனத்தில் Assistant Software Engineer வேலைக்கு 50 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில், பொதுப்பிரிவினருக்கு 19 இடங்களும், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 14 இடங்களும், பொருளாதாரத்தில் பின் தங்கிய பிரிவினருக்கு 5 இடங்களும், ஆதி திராவிடர் பிரிவினருக்கு 8 இடங்களும், பழங்குடியினர் பிரிவினருக்கு 4 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க, Computer Science, Computer Technology, Information Technology, Computer Science & Information Technology, Computer Applications பாடப்பிரிவில் பி.இ., பி.டெக்., அல்லது எம்.சி.ஏ பட்டம் பெற்றிருக்க வேண்டும். 2019 கேட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இந்தப் பணிக்கு ரூ.44,900 ஊதியம் அளிக்கப்படும். 22 வயது முதல் 27 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 3 வருடங்களும், ஆதி திராவிடர், பழங்குடியினர் பிரிவினருக்கு 5 வருடங்களும் வயது தளர்வு அளிக்கப்படும்.
தகுதியானவர்கள் கேட் தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்ப்டையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
www.cris.org.in எனும் இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகஸ்ட் 7.
***
2. கர்நாடகா வங்கி
கர்நாடகா வங்கியில் Probationary Clerks பணிக்கான வேலைவாய்ப்பினை அறிவித்திருக்கிறார்கள்.
இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க, ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் இளநிலை பட்டம் பெற்று கணினியில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும். மேலும், தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தியில் பேச தெரிந்திருக்க வேண்டும்.
இந்தப் பணிக்கு ரூ.37,000 ஊதியம் அளிக்கப்படும். 1.7.2019ம் தேதியின்படி 26 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆதி திராவிடர், பழங்குடியினர் பிரிவினருக்கு 5 வருடங்கள் வயது தளர்வு அளிக்கப்படும்.
தகுதியானவர்கள் ஆன்லைன் எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆன்லைன் எழுத்து தேர்வு டெல்லி, மும்பை, பெங்களூரு, மங்களூரு, மைசூர் ஆகிய இடங்களில் ஆகஸ்ட் 3ம் தேதி நடைபெறும்.
www.karnatakabank.com எனும் இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் ஜூலை 20.
***
3. பாபா அணு ஆராய்ச்சி மையம்
கல்பாக்கத்தில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் Plant Operator, Lab Assistant, Fitter, Welder, Turner, Electrician, Instrument Mechanic, Electronic Mechanic, AC Mechanic, Technician ஆகிய வேலைகளுக்கு 47 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
Plant Operator பணிக்கு 7 காலியிடங்கள் உள்ளன. இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க, அறிவியல் பாடப்பிரிவில் இயற்பியல், வேதியியல், கணிதத்தை ஒரு பாடமாகக் கொண்டு 60 சதவிகித மதிப்பெண்களுடன் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Lab Assistant பணிக்கு 4 காலியிடங்கள் உள்ளன. இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க, அறிவியல் பாடப்பிரிவில் இயற்பியல், வேதியியல், கணிதத்தை ஒரு பாடமாகக் கொண்டு 60 சதவிகித மதிப்பெண்களுடன் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி அல்லது 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் Laboratory Assistant டிரேடில் ஐ.டி.ஐ. தேர்ச்சியுடன் 2 வருட NTC சான்று பெற்றிருக்க வேண்டும்.
Fitter, Welder, Turner, Electrician, Instrument Mechanic, Electronic Mechanic, AC Mechanic ஆகிய பணிகளுக்கு 32 காலியிடங்கள் உள்ளன. இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க 60 சதவிகித மதிப்பெண்களுடன் 10 வகுப்பு தேர்ச்சி பெற்று, தொடர்புடைய பிரிவுகளில் டிரேடில் ஐ.டி.ஐ. தேர்ச்சியுடன் 2 வருட NTC சான்று பெற்று பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
இந்தப் பணிகளுக்கு உதவித்தொகையாக, முதல் வருடம் 10,500 ரூபாயும், இரண்டாம் வருடம் 12,500 ரூபாயும் அளிக்கப்படும். 7.8.2019ம் தேதியின்படி 18 வயது முதல் 22 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Boiler Operator பிரிவில் Technician - C பணிக்கு 4 காலியிடங்கள் உள்ளன. இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க, பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Boiler Attendant-ல் முதல் வகுப்பில் சான்று பெற்றிருக்க வேண்டும். இந்தப் பணிக்கு ரூ.25,500 ஊதியம் அளிக்கப்படும். 7.8.2019ம் தேதியின்படி 18 வயது முதல் 25 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Painter பிரிவில் Technician - B பணிக்கு ஒரு காலியிடம் உள்ளது. இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க, 60 சதவிகித மதிப்பெண்களுட, பத்தாம் வகுப்பு தேச்சி பெற்று, Painter டிரேடில் ஐ.டி.ஐ. தேர்ச்சியுடன் 2 வருட NTC சான்று பெற்று, பணி அனுபவம் பெற்றீருக்க வேண்டும். இந்தப் பணிக்கு ரூ.21,700 ஊதியம் அளிக்கப்படும். 7.8.2019ம் தேதியின்படி 18 வயது முதல் 25 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தகுதியானவர்கள் www.barc.gov.in எனும் இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் ஆகஸ்ட் 7.