நடந்து முடிந்த பட்ஜெட்டில் எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களின் பட்டப்படிப்பிற்காக ஒதுக்கப்பட்ட நிதி கடந்த நிதியாண்டில் ஒதுக்கப்பட்டதைவிட 3,000 கோடி ரூபாய் குறைவாக உள்ளது. இதனால், எஸ்.சி., எஸ்.டி. மாணவர்கள் பட்டப்படிப்பு மேற்கொள்வதில் பாதிப்பு ஏற்படும்.
ஆகையால், நாடாளுமன்ற லோக்சபா உறுப்பினர்களான திருமாவளவனும், ரவிக்குமாரும் மத்திய நிதியமைச்சரை சந்தித்து எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கான பட்டப்படிப்புக்கு கூடுதல் நிதியை ஒதுக்க வலியுறுத்தினர்.
ஜன் தன் வங்கிக்கணக்குகள் மூலம் பட்டப்படிப்பு மேற்கொள்ளும் எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு 5 ஆயிரம் கடன் பெறலாம் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அதனை 50 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட 7 கோரிக்கைகளையும் வலியுறுத்தியுள்ளனர்.