இந்தியா

பசு காவல் குண்டர்களுக்கு 3 ஆண்டு சிறை : மத்திய பிரதேச அரசு அதிரடி!

பசு பாதுகாவலர்கள் என்ற போர்வையில் சிறுபான்மையினரை தாக்குபவர்களுக்கு எதிராக அதிரடி சட்டம் இயற்றவுள்ளது மத்திய பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் அரசு.

 பசு காவல் குண்டர்களுக்கு 3 ஆண்டு சிறை : மத்திய பிரதேச அரசு அதிரடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நாடெங்கும், ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்துத்வா சித்தாந்தங்களை மக்கள் மீது திணிப்பதற்காக மாட்டிறைச்சி வைத்திருந்தாலோ, சாப்பிட்டாலோ அவர்களை வன்முறைக்கு ஆளாக்குவதும், சிறுபான்மையினர், தலித்துகளை கொலை செய்வதையுமே வாடிக்கையாக வைத்திருக்கிறது மதவாதக்கும்பல்.

இதுபோன்ற வன்முறை வெறியாட்டங்களை ஒடுக்கும் விதமாக மத்திய பிரதேச காங்கிரஸ் அரசு புதிய சட்டத்தை இயற்றத் திட்டமிட்டிருக்கிறது.

அதாவது, பசுவைப் பாதுகாக்கிறோம் என்ற போர்வையில், மாட்டிறைச்சி வைத்திருப்பவர்களையும், மாட்டிறைச்சி உண்பவர்களையும் வன்முறைக்கு ஆளாக்கும் / கொலைவெறித் தாக்குதலில் செயல்களில் ஈடுபடும் குண்டர்களை கைது செய்து 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கும் புதிய சட்டத்தை இயற்றவுள்ளது.

 பசு காவல் குண்டர்களுக்கு 3 ஆண்டு சிறை : மத்திய பிரதேச அரசு அதிரடி!

இந்தியாவிலேயே பசு குண்டர்களுக்கு எதிராக முதன்முறையாக சட்டம் இயற்றி தண்டனை கொடுக்கும் முதல் மாநிலம் மத்திய பிரதேசம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.

முன்னதாக, உத்தர பிரதேசத்தில் உள்ள முதியவர் ஒருவரை மாட்டிறைச்சி வைத்திருந்ததாக அடித்துக் கொன்றதை அடுத்து பசு குண்டர்களை உச்சநீதிமன்றமே கடுமையாக எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories