நாடு முழுவதும், இந்துத்துவா மற்றும் ஆர்.எஸ்.எஸ் போன்ற மதவாதக் கும்பலச் சேர்ந்தவர்கள் சிறுபான்மையினர் மீது கொடூர தாக்குதலை நடத்தி வருகின்றனர். குறிப்பாக, ஜெய் ஸ்ரீராம் போன்ற இந்து மதம் சார்ந்த முழக்கங்களை கோஷமிடச் சொல்லி வற்புறுத்தி இஸ்லாமியர்கள் மீது தாக்குதலை நடத்தி வருகிறது இந்துத்துவா கும்பல்.
அந்த வகையில் சமீபத்தில், ஜார்கண்ட் மாநிலத்தில் இஸ்லாமிய இளைஞர் ஒருவர் பைக் திருட வந்ததாக விசாரிக்கும்போது அவரது பெயரை கேட்டதும், ஜெய் ஸ்ரீராம் என கூறச்சொல்லி 7 மணிநேரத்துக்கும் மேலாக கட்டி வைத்து மதவாதக் கும்பல் வன்முறையில் ஈடுபட்டுள்ளது. இதனால், பலத்த காயமடைந்த இஸ்லாமிய இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது நாடெங்கும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து வட மாநிலங்களில் உள்ள இஸ்லாமியர்கள் மிகுந்த அச்சத்துடனே தங்களது வாழ்வை கடத்த வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில், மக்களவைக் கூட்டத்தொடரின் போது, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் எம்.பியான பி.கே.குன்ஹாலிகுட்டி ஜார்கண்டில் இஸ்லாமிய இளைஞர் கொல்லப்பட்டது தொடர்பாக சிறப்பு விவாதம் மேற்கொள்ளவேண்டும் எனக் கோரி ஒத்திவைப்பு தீர்மானத்தை தாக்கல் செய்தார்.