இந்தியா

ரயில்வே துறையை தனியார் மயமாக்க முயற்சிக்கிறதா பா.ஜ.க?

நாட்டில் பல்வேறு துறைகளும் தனியார்மயமாகி வரும் நிலையில் தற்போது ரயில்வே துறையையும் தனியார் மயமாக்க மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.

ரயில்வே துறையை தனியார் மயமாக்க முயற்சிக்கிறதா பா.ஜ.க?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

நம் நாட்டில் ஏற்கனவே பேருந்துகள், விமானம், கப்பல் சேவைகளில் அரசு மட்டுமின்றி தனியாருக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ரயில் போக்குவரத்து மட்டும் தனியாருக்கு வழங்கப்படவில்லை. இந்நிலையில் தற்போது ரயில்வே துறைக்கு வருவாயை அதிகரிக்கும் நோக்கில் தனியாருக்கும் அனுமதி அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்திய ரயில்வேயின் இரு வழித்தடங்களில் தனியார்களை வைத்து ரயில்களை இயக்க ரயில்வே வாரியத்தலைவர் வி.கே. யாதவ் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ஆரம்பகட்டமாக சுற்றுலா மற்றும் ஐஆர்சிடிசி ஆகியவற்றுக்கு தலா ஒரு ரயில்களை தனியார் மூலம் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்காக குத்தகை முறைப்படி தனியாரிடம் இருந்து குறிப்பிட்ட தொகையைப் பெறவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் வருங்காலத்தில் விரிவாக்கம் செய்யப்பட்டு முக்கிய சுற்றுலா தளங்கள் உள்ள வழித்தடங்கள் போன்றவை தனியார் வசம் ஒப்படைக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories