தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், வலுப்புற்று வாயு எனும் அதி தீவிர புயலாக நேற்று காலை உருவானது.
இது குஜராத் மாநிலத்தில் கரையை கடக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டதால் அம்மாநிலத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டனர்.
ராணுவம், விமானப்படை, கடலோர காவல்படை, தேசிய பேரிடர் மீட்புக் குழு, கமாண்டோ வீரர்கள் என ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பு பணிக்காகவும், மீட்பு பணிக்காகவும் உஷால் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், வாயு புயல் குஜராத் மாநிலத்தை தாக்காது என்றும், அதனை ஒட்டியுள்ள பகுதியான போர்பந்தர், வேரவல், துவாரகா வழியாக கரையை கடக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயல் கரையை கடக்கும் போது, 155 முதல் 165 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் அறிவித்துள்ளது.