நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் பிரதமர் மோடி தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணையத்திடம் பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியிருந்தது.
இந்நிலையில், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், மோடியின் தேர்தல் விதிமீறல்கள் குறித்த விவரங்களை வெளியிடக்கோரி பத்திரிகையாளர் ஒருவர் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், தேர்தல் ஆணையர்களில் ஒருவரான அசோக் லவாசாவின் கருத்துகளையும் குறிப்பிடக்கோரி கேட்டிருந்தார்.
இது குறித்து பதிலளித்த தேர்தல் ஆணையம், தேர்தல் நடத்தை விதிமீறல்கள் தொடர்பான புகார்கள் அனைத்தும் அந்தந்த பிராந்திய பிரிவுகளால் கையாளப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. ஆதாரங்கள் அழிக்கப்பட்டு விடும் என்பதால் அவற்றை வழங்க முடியாது என தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.