ஒடிசா மாநிலத்தின் பாலங்கிர் மாவட்டத்தில் உள்ள பாட்னாகர் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றிருப்பவர் பிஜூ ஜனதா தள கட்சியின் உறுப்பினர் சரோஜ் குமார் மேஹர்.
சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் தனது தொகுதிக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் சென்றிருக்கிறார் சரோஜ் குமார். அங்கு, மக்களிடம், அரசு திட்டங்கள் எந்த அளவுக்கு செயல்படுத்தப்பட்டுள்ளன மற்றும் அதன் நிறை குறைகளை கேட்டறிந்தார்.
அப்போது, பேல்பேடா என்ற பகுதி மக்கள், அங்கு புதிதாக போடப்பட்ட சாலை தரமற்று உள்ளதாக எம்.எல்.ஏ. சரோஜிடம் புகார் தெரிவித்தனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சரோஜ் குமார் மேஹர், புதிதாக போடப்பட்டுள்ள சாலையை சோதித்த போது அது தரமற்று இருந்தது தெரியவந்தது. இதனால் கோபமடைந்த மக்கள், பொறியாளருக்கு தக்க தண்டனை வழங்கும் படி கூறினார்.
இதனையடுத்து பொறியாளரை தோப்புகரணம் போடச்சொல்லி தண்டனை அளித்தார் மேஹர். மக்களின் கட்டாயத்தாலேயே தான் அவ்வாறு செய்ததாகவும், அதற்கு தான் வருந்துவதாகவும் மேஹர் தெரிவித்துள்ளார்.