கோடை வெயில் முடிவடைந்ததை அடுத்து, தமிழகத்தில் வெயிலின் தாக்கமும், அனல் காற்றும் குறைந்துள்ளது. ஆனால், உள்மாவட்டங்களில் 2-3 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை இயல்பைவிட அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்.
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 48 மணிநேரத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழையும், தென் மாவட்டங்களிலும், உள் மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தென்மேற்குப் பருவமழைக்கான சாதகமான சூழல் ஏற்பட்டுள்ளதால் கேரளாவின் கடலோர பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடனும், காற்று வேகமாகவும் வீசி வருகிறது. எனவே மன்னார் வளைகுடா பகுதியில் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டு வருகிறது.
ஆகையால் குமரிக்கடல் பகுதியிலும், மன்னார் வளைகுடா பகுதியிலும் மணிக்கு 30-40 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.