இந்தியா

மோடி அமைச்சரவையில் யாருக்கெல்லாம் இடம்? அமித்ஷாவுக்கு என்ன பதவி ? உத்தேசப்பட்டியல் இதோ !

டெல்லியில் பிரதமர் மோடி இன்று பதவியேற்கிறார். அவருடன் 60 அமைச்சர்கள் பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த அமைச்சரவரையில் யாரரெல்லாம் இடம் பெறப்போகிறார் என்ற உத்தேசப்பட்டியல் வெளியாகியுள்ளது.

மோடி அமைச்சரவையில் யாருக்கெல்லாம் இடம்? அமித்ஷாவுக்கு என்ன பதவி ? உத்தேசப்பட்டியல் இதோ !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

நாடாளுமன்றத்தின் 17வது மக்களவை தேர்தலில் பா.ஜ.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் என மொத்தம் 350 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதில் பா.ஜ.க 303 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது. இதைத் தொடர்ந்து, குடியரசுத்தலைவர் மாளிகையில் இன்று மாலை 7 மணிக்கு பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இரண்டாவது முறையாக நாட்டின் பிரதமர் பதவியை மோடி ஏற்கிறார். குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் அவருக்கு பதவி பிரமாணமும், ரகசியக்காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார்.

டெல்லியில் பா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷா 3-வது நாளாக பிரதமரின் இல்லத்தில் நரேந்திர மோடியுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்நிலையில், கடந்த 5 ஆண்டுகளில் செயல்பட்ட அமைச்சர்களை நீக்கிவிட்டு, புதிய அமைச்சர்களை நியமிக்க பா.ஜ.க உயர்மட்டக்குழு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளிவருகின்றன.

இதனிடையே அருண் ஜெட்லி, இந்தமுறை தனக்கு அமைச்சர் பதவி வேண்டாம் என்று கூறிவிட்டதால், நிதியமைச்சராக யாரை நியமிப்பது என்று அந்த குழுவில் தீவிரமாக விவாதித்துள்ளது. மேலும், அமேதி தொகுதியில் வெற்றி ஸ்மிருதி ராணி, மேற்கு வங்காளத்தில் வெற்றிக்கு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த முகுல் ராய் ஆகியோருக்கும் முக்கிய அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் லோக் ஜனசக்தி கட்சி தலைவர் ராம் விலாஸ் பஸ்வான், குடியரசுக் கட்சியின் ராம்தாஸ் அத்வாலே மத்திய அமைச்சரவையில் இடம் பெறலாம் என கூறப்படுகிறது.

மோடி அமைச்சரவையில் யாருக்கெல்லாம் இடம்? அமித்ஷாவுக்கு என்ன பதவி ? உத்தேசப்பட்டியல் இதோ !

தமிழகத்தில் இருந்து மக்களவைக்கு தேர்வான ஒரே எம்.பி., ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமாருக்கு மத்திய இணையமைச்சர் பதவி வழங்கப்படலாம், பதவியை உறுதி செய்ய ஓ.பி.எஸ் தரப்பில் வலியுத்துவதாக தகவல்கள் வெளியானது. ஆனால் தனது ஆதரவாளரான மாநிலங்களை உறுப்பினர் வைத்தியலிங்கத்திற்கு அமைச்சர் பதவி பெற முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேட்டுவருவதாகவும் தகவல் தகவல்கள் வெளிவந்துள்ளது.

அதுமட்டுமின்று கட்சியின் தலைமை பொறுப்பில் நீடித்துக்கொண்டே அமைச்சரவையில் இடம்பெறுவது அமித் ஷா ஆலோசிப்பதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. இதற்கிடையே, மத்திய அமைச்சரவை பட்டியலை இறுதி செய்வதற்காக நேற்று 3 மணி நேரம் மோடியுடன் ஆலோசனை நடத்திய பா.ஜ.க தேசியத் தலைவர் அமித் ஷா மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்களையும் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

பிரதமர் மோடி இல்லத்தில் நடைபெறும் ஆலோசனையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற உள்ள சிவசேனா, ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளுக்கு தலா 2 அமைச்சர்கள் பதவியும், அகாலி தால், அப்னா தால் உள்ளிட்ட கட்சிகளுக்கு 1 அமைச்சர் பதவியும் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. பிரதமர் மோடியுடன் 60-70 அமைச்சர்கள் இன்று பதவியேற்பார்கள் என்று தெரிகிறது.

banner

Related Stories

Related Stories