இந்தியா

ராகுல் காந்தியின் ராஜினாமா முடிவு தற்கொலைக்கு நிகரானது - லாலு பிரசாத் யாதவ் !

காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி ராஜினாமா செய்தால் அது தற்கொலை செய்வதற்கு சமம் என ராஷ்ட்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தியின் ராஜினாமா முடிவு தற்கொலைக்கு நிகரானது - லாலு பிரசாத் யாதவ் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நாடாளுமன்றத் தேர்தலில் தொடர்ந்து இரண்டாவது முறையாக அகில இந்திய காங்கிரஸ் கட்சி பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. ஆனால், தமிழகத்தில் தி.மு.க.,வுடனான கூட்டணியிலும், கேரளாவிலும் அதிகளவிலான வெற்றியை பெற்றுள்ளது.

வட இந்தியாவில் காங்கிரஸின் ஐக்கிய முற்போக்கு கூட்டணி பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளதாலும், தொடர்ந்து இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சி அமைக்காததற்கு பொறுப்பேற்றும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்து ராகுல்காந்தி ராஜினாமா செய்வதாக தகவல் வெளியானது. அதற்கு காங்கிரஸ் காரிய கமிட்டி மறுப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் இது குறித்து தெரிவிக்கையில், காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து ராகுல் காந்தி ராஜினாமா செய்வதாக இருந்தால் அது தற்கொலை செய்வதற்கு சமம் என கூறியுள்ளார்.

ராகுல் காந்தி ராஜினாமா செய்தால் அது காங்கிரஸுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளுக்குமான தற்கொலை முடிவாகவே அமையும் என்று தெரிவித்துள்ளார். மதவாத, பாசிச சக்தியாக உள்ள பாஜகவை வேறோடு அழிக்க வேண்டும் என்பதே அனைத்து எதிர்க்கட்சிகளின் குறிக்கோளாக இருந்தன. ஆனால், நடந்து முடிந்த தேர்தலில், அதனை தேசிய அளவில் எழுப்ப முடியாமல் போய்விட்டது.

மேலும், காங்கிரஸ் கட்சியின் தலைமை பொறுப்பில், காந்தி நேரு குடும்பத்தினரை தவிர்த்து வேறு எவரேனும் பதவி வகித்தால், கடும் விமர்சனத்துக்கு ஆளாக நேரிடும். அதுமட்டுமில்லாமல் பொம்மை தலைவரை கொண்டுள்ள கட்சி என பாஜகவினர் சாடத் தொடங்குவர்.

எனவே, இது போன்ற விஷமிகளுக்கு இடம் கொடுக்காமல் இருப்பது நலம் என கருத்துத் தெரிவித்துள்ளார் லாலு பிரசாத் யாதவ்.

banner

Related Stories

Related Stories