ஆகாஷ்-1 எஸ் ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதாக இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) தெரிவித்துள்ளது. ஆகாஷ்-1 எஸ் ஏவுகணை உள்நாட்டிலேயே தயாராகியுள்ளதாக டிஆர்டிஓ தெரிவித்துள்ளது.
தரையிலிருந்து வான் பகுதியிலுள்ள இலக்கைத் துல்லியமாகத் தாக்கி அழிக்கும் வகையில் ஆகாஷ் 1 எஸ் ஏவுகணை உருவாக்கப்பட்டுள்ளது. டிஆர்டிஓ கடந்த இரண்டு நாட்களில் 2 முறை இந்த ஏவுகணை சோதனை நடத்தி வெற்றிகண்டுள்ளது.
குறுகிய தொலைவு பாயும் இந்த ஏவுகணை ஏற்கனவே இராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஆகாஷ் 1எஸ் ஏவுகணை மேம்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அனைத்து சூழ்நிலையிலும் செயல்படும் வகையில் இந்த ஏவுகணை உருவாக்கப்பட்டுள்ளது.