17 வது மக்களவையில் இந்த முறை அதிக அளவில் பட்டப்படிப்பு பெற்ற எம்.பிகளுக்கு இடம்பெற்றுள்ளனர். இதுகுறித்து பி.ஆர்.எஸ் சட்ட ஆராய்ச்சி மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை உறுப்பினர்களில் 43% பேர் பட்டதாரிகளாக உள்ளனர். அதில் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் 25%. 4% உறுப்பினர்கள் முனைவர் பட்டம் பெற்றவர்கள்.
தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனும் முனைவர் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 394 உறுப்பினர்கள், குறைந்தபட்சம் கல்வி கற்றவர்களாக உள்ளனர் என அந்த அமைப்பு தனது ஆய்வில் தெரிவித்துள்ளது.
17-ஆவது மக்களவையில் உள்ள உறுப்பினர்களில் 27% எம்.பிக்கள் 12-ஆம் வகுப்பு வரை படித்துள்ளனர். இதுவே, 16வது மக்களவையில் 20% ஆக மட்டுமே இருந்தது என குறிப்பிட்டுள்ளனர்.
1996-ல் இருந்து, தற்பொழுது வரை உள்ள மக்களவை உறுப்பினர்களில் 75 சதவீதம் பட்டதாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.