இந்தியா

குஜராத் டியூசன் சென்டரில் தீ விபத்து: 20 மாணவர்கள் உயிரிழப்பு!

குஜராத் மாநிலம் சூரத் நகரில் பயிற்சி மையத்தில் (டியூசன் செண்டர்) திடீர் என்று தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 20 மாணவர்கள் உயிழந்துள்ளனர்.

குஜராத் டியூசன் சென்டரில் தீ விபத்து: 20 மாணவர்கள் உயிரிழப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

குஜராத் மாநிலம் சூரத் நகரில் சர்த்தானா என்ற இடத்தில் டியூசன் செண்டர் இயங்கி வந்துள்ளது. இந்த டியூசன் செண்டரில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் தினம் வந்து படித்து வந்தனர். 4 மாடி கொண்ட இந்த கட்டிடத்தில் 3 வணிக வளாகம் உள்ளது. அதற்கு மேலாக 4வது மாடியில் டியூசன் செண்டர் இயங்கி வந்துள்ளது.

இந்த டியூசன் செண்டரில் எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது. படி வழியாக தீ பிறவி வெப்பம் அதிகரித்ததால் சில மாணவர்கள் 4 வது மாடியில் இருந்து கீழே குதித்தனர். இந்த மாணவர்களை கீழே இருந்த பொதுமக்கள் அவர்களை காப்பாற்றியுள்ளனர். சில மாணவர்கள் கீழே குதித்ததில் படுகாயம் அடைந்தனர். 19 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரார்கள் தீயினை அணைக்க போராடினர்கள், ஆனால் தீ கட்டுக்குள் கொண்டுவருவதற்குள் 20 மாணவர்கள் உயிருந்தனர்.

காயமடைந்தவர்களை முதலமைச்சர் விஜய் ரூபானி மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார். இதனிடையே சூரத் வணிக வளாகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து குறித்து விசாரணை நடத்த முதலமைச்சர் விஜய் ரூபானி உத்தரவிட்டுள்ளார். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் வழங்க அவர் உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவத்திற்கு சமூக வலைத்தளங்களில் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தீ விபத்து தொடர்பாக கட்டிட உரிமையாளர் மற்றும் பயிற்சி வகுப்பு உரிமையாளர் தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ளனர்.

banner

Related Stories

Related Stories