இந்தியா

அமித்ஷா பேரணியில் வன்முறை : பா.ஜ.க குண்டர்களால் தூண்டப்பட்டதாக மம்தா கருத்து!

அமித்ஷா பேரணியின்போது ஏற்பட்ட வன்முறை பா.ஜ.க-வினர் அழைத்து வந்த குண்டர்களால் தூண்டப்பட்டது எனத் தெரிவித்துள்ளார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி.

அமித்ஷா பேரணியில் வன்முறை : பா.ஜ.க குண்டர்களால் தூண்டப்பட்டதாக மம்தா கருத்து!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் நேற்று மாலை பா.ஜ.க தலைவர் அமித்ஷா பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் வன்முறை வெடித்தது. இது பா.ஜ.க-வினர் அழைத்து வந்த குண்டர்களால் ஏற்பட்ட வன்முறை எனத் தெரிவித்துள்ளார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி.

அமித்ஷா பங்கேற்ற பேரணி நேற்று மாலை மத்திய கொல்கத்தாவின் எஸ்ப்ளனேட் பகுதியில் தொடங்கியது. கொல்கத்தா பல்கலைக்கழக மாணவர்கள் 'கோபேக் அமித்ஷா' என பதாகை ஏந்தியதோடு பா.ஜ.க-விற்கு எதிராக கோஷம் எழுப்பியுள்ளனர்.

இதனால், பா.ஜ.க ஆதரவாளர்கள் இரும்பு கம்பிகள் கொண்டு மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். போலீசார் தடியடி நடத்தி இருதரப்பினரையும் கலைத்துள்ளனர். வன்முறை நடந்த இடங்களில் எடுக்கப்பட்ட வீடியோக்களில் காவி உடை அணிந்த சிலர் கற்களை வீசுவது போல் பதிவாகியுள்ளது.

“பா.ஜ.க-வினர் மேற்குவங்கத்திற்கு வெளியில் இருந்து அழைத்து வந்த குண்டர்களால் இந்த வன்முறை சம்பவம் தூண்டப்பட்டுள்ளது. பா.ஜ.க இன்று செய்ததை மேற்குவங்கம் ஒருபோதும் மறக்காது” என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories