இந்தியா

நீதிபதிகள் பரிந்துரை நிராகரிப்பு : திறமைக்கு முன்னுரிமை தேவை என கொலிஜியம் வலியுறுத்தல்!

கொலிஜியம் பரிந்துரையை நிராகரித்த மத்திய அரசு, தகுதிக்கும் திறமைக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தேர்வு குழு வலியுறுத்தியுள்ளது.

நீதிபதிகள் பரிந்துரை நிராகரிப்பு : திறமைக்கு முன்னுரிமை தேவை என கொலிஜியம் வலியுறுத்தல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

உச்சநீதிமன்ற நீதிபதிகள் தேர்வுக் குழு (கொலிஜியம்) பரிந்துரை செய்த 2 நீதிபதிகளை மத்திய அரசு நிராகரித்தது. இந்த நிலையில் மேலும் 2 நீதிபதிகளை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க வேண்டும் என்று நீதிபதிகள் தேர்வு குழு பரிந்துரைத்துள்ளது.

நீதிபதிகள் பரிந்துரை நிராகரிப்பு தொடர்பாக உச்சநீதிமன்றம் முன்னதாகவே மத்திய அரசை கண்டித்துள்ளது. உச்சநீதிமன்றத்திற்கும், மத்திய அரசுக்கும் இடையே மோதல் போக்கு தொடர்ந்துகொண்டே உள்ளது.

உச்சநீதிமன்றத்தில் மொத்தம் 31 நீதிபதிகள் இருக்கவேண்டும். ஆனால் தற்போது 27 நீதிபதிகள் மட்டுமே பணியில் உள்ளனர். இதனால் நீதிபதிகளுக்கு வேலைப் பளுவும், அதிகமான வழக்குகள் நிலுவையில் இருக்கவும் வாய்ப்புள்ளது.

உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுப்பதாக தகவல் தெரிவிக்கின்றனர். ஆனால் அதில் எந்த நடவடிக்கையும் எடுத்தாகத் தெரியவில்லை என பலர் கருதுகின்றனர்.

மேலும் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு உச்ச \நீதிமன்ற நீதிபதிகள் தேர்வுக்குழு ஜார்க்கண்ட் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அனிருதா போஸ், கவுகாத்தி உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.எஸ். போபண்ணா ஆகியோரை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரை செய்திருந்தது.

மத்திய அரசு நிராகரித்ததைத் தொடர்ந்து தற்போது மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி பி.ஆர்.கவாய், இமாச்சல பிரதேச உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் ஆகியோரை நீதிபதிகள் தேர்வுக் குழு பரிந்துரை செய்திருக்கிறது.

நீதிபதிகள் தேர்வுக் குழுவில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, என்.வி. ரமணா, அருண் மிஸ்ரா, ஆர்.எஃப். நரிமன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மேலும் நீதிமன்ற விஷயங்களில் மத்திய அரசு தலையீடு இருப்பதாக கடந்த ஆண்டு உச்சநீதிமன்ற நீதிபதிகள் 4 பேர் குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories