தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினை வரும் 13-ம் தேதி சென்னையில் சந்தித்துப் பேச இருக்கிறார். கேரள முதல்வர் பினராயி விஜயனையும் இன்று சந்திக்கிறார் சந்திரசேகர ராவ்.
தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி தலைவரும், தெலுங்கானா முதல்வருமான சந்திரசேகர ராவ், மக்களவைப் பொதுத் தேர்தலில் காங்கிரஸ், பா.ஜ.க என எந்தக் கூட்டணியிலும் இணையவில்லை. இந்நிலையில், தேர்தலுக்குப் பின்னர் அவர் வலுவான மூன்றாவது அணியை அமைக்கத் திட்டமிடுவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று மாலை சந்திரசேகர ராவ், திருவனந்தபுரம் சென்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை சந்தித்துப் பேசவுள்ளார். வரும் 13-ம் தேதி சென்னைக்கு வந்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசவிருக்கிறார் சந்திரசேகர ராவ்.
தேர்தலுக்கு முன்பே ஒருமுறை சந்திரசேகர ராவ் சென்னை வந்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்துச் சென்றார். இந்நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்பு மீண்டும் அவர் தி.மு.க தலைவரைச் சந்திக்க வருவது அரசியல் முக்கியத்துவம் பெறுகிறது.