இந்தியா

பெட்ரோல் விலை மீண்டும் உயர்வு - பொதுமக்கள் கவலை

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.

பெட்ரோல் விலை மீண்டும் உயர்வு - பொதுமக்கள் கவலை
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Mohan Prabhaharan
Updated on

சென்னையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.75.75 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.69.96 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சர்வதேச சந்தை கச்சா எண்ணெய் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.

பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் நிர்ணையிக்கும் நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி எண்ணெய் நிறுவனங்கள் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 7 காசு அதிகரித்து லிட்டருக்கு ரூ.75.75 ஆகவும், டீசல் நேற்றைய விலையில் இருந்து மாற்றம் எதுவும் இல்லாமல் லிட்டருக்கு ரூ.69.96 காசுகளாகவும் உள்ளது.

பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், விலைவாசி அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories