திமுக அரசு

“அமைச்சரை எதிர்த்து கேள்வி கேட்டதற்காக இளைஞரை கொன்றது அராஜக அ.தி.மு.க ஆட்சி” - நாகையில் கனிமொழி விளாசல்!

அ.தி.மு.க கூட்டணி பதவி வெறியால் உருவான சந்தர்ப்பவாத கூட்டணி என கனிமொழி எம்.பி விமர்சித்துள்ளார்.

“அமைச்சரை எதிர்த்து கேள்வி கேட்டதற்காக இளைஞரை கொன்றது அராஜக அ.தி.மு.க ஆட்சி” - நாகையில் கனிமொழி விளாசல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

நாகப்பட்டினம் சட்டப்பேரவைத் தொகுதி தி.மு.க கூட்டணி வேட்பாளர் முகம்மது ஷாநவாஸை ஆதரித்து கனிமொழி எம்.பி. இன்று தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது மக்கள் மத்தியில் பேசிய கனிமொழி எம்.பி., "எல்லோராலும் படிக்க முடியும் என்ற எண்ணத்தைக் கொண்டு வந்தவை திராவிடக் கட்சிகள். நம் வீட்டுப் பிள்ளைகள் மருத்துவம் படிக்கவேண்டும் என்பதற்காக மாவட்டந்தோறும் மருத்துக் கல்லூரிகளை கொண்டு வந்த கட்சி தி.மு.க. ஆனால், தற்போது நம் பிள்ளைகளை மருத்துவம் படிக்க விடாமல் நீட் தேர்வை கொண்டு வந்த கட்சி பா.ஜ.க.

நீட் தேர்வை ஆதரித்து வாக்களித்த கட்சி அ.தி.மு.க. நீட் தேர்வால் பல மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர். கவுன்சிலராக கூட தகுதியில்லாதவர் முதல்வராகி விட்டார் என விமர்சித்த பா.ம.க-வுடன் கூட்டணி வைத்திருக்கிறது அ.தி.மு.க. அ.தி.மு.க கூட்டணி பதவி வெறியால் உருவான சந்தர்ப்பவாத கூட்டணி.

மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தால்தான் நல்ல திட்டங்களை தமிழகத்திற்கு கொண்டு வர முடியும் என்றார் பழனிசாமி. ஜி.எஸ்.டி சட்டத்தைக் கொண்டு வந்தது மத்திய அரசு. ஆனால், தமிழகத்திற்கு மத்திய அரசு தர வேண்டிய ரூ.15 ஆயிரத்து 475 கோடி நிலுவைத் தொகையை அ.தி.மு.க அரசால் கேட்டு வாங்க முடியவில்லை. பிறகு எதற்காக அவர்களோடு ஒட்டி உறவாட வேண்டும்?

தமிழகம் புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது மத்திய பா.ஜ.க அரசிடம் உரிய நிவாரணத்தைக் கேட்டுப் பெற முடிந்ததா இவர்களால்?

கடந்த 10 ஆண்டுகளாக பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை. பொள்ளாச்சியில் நூற்றுக்கணக்கான பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்கள். புகார் அளிக்க காவல் நிலையத்திற்கு சென்ற பெண்கள் காவல்துறை அதிகாரிகளால் வெளியேற்றப்பட்டார்கள். நியாயம் கேட்டு சென்ற ஒரு பெண்ணின் சகோதரர் அடித்து விரட்டப்பட்டார்.

“அமைச்சரை எதிர்த்து கேள்வி கேட்டதற்காக இளைஞரை கொன்றது அராஜக அ.தி.மு.க ஆட்சி” - நாகையில் கனிமொழி விளாசல்!

பாதிக்கப்பட்ட பெண்களின் குடும்பத்தினருக்கு இதுவரை நியாயம் கிடைக்கவில்லை. தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க மாவட்டம்தோறும் தனி நீதிமன்றம் அமைக்கப்படும் என்று தி.மு.க தலைவர் அறிவித்திருக்கிறார்.

புயல், மழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மின்சாரம் இல்லை என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியனிடம் முறையிட்டார்கள். அதற்கு அவர் நாங்களே தீப்பந்தத்தில்தான் இருந்தோம். 2, 3 நாட்கள் உங்களால் மின்சாரம் இல்லாமல் இருக்க முடியாதா என்றார்.

அமைச்சர் ஓ.எஸ்.மணியனை பொதுமக்கள் சூழ்ந்துகொண்டு கேள்வி கேட்டபோது, சுவர் ஏறி தப்பி ஓடினார். அவரை எதிர்த்து கேள்வி கேட்ட ஒரே காரணத்திற்காக இளையராஜா என்ற இளைஞர் கொல்லப்பட்டார். அராஜகத்தின் உச்சமாக இருக்கிறது அ.தி.மு.க ஆட்சி.

ரூ.7,000 கோடி விவசாய கடனை தள்ளுபடி செய்தவர் முத்தமிழறிஞர் கலைஞர். இலவச மின்சாரம் தந்தவர் கலைஞர். ஆனால், தன்னை விவசாயி என்று கூறிக்கொள்ளும் பழனிசாமி இலவச மின்சாரத்தை நிறுத்தினார்.” என விமர்சித்துப் பேசினார்.

banner

Related Stories

Related Stories