திமுக அரசு

“அ.தி.மு.க முற்றிலும் துடைத்தெறியப்படும்; தி.மு.க மாபெரும் வெற்றியை பெறும்” - ‘இந்து’ என்.ராம் ட்வீட்!

தி.மு.க. கூட்டணி 234 தொகுதிகளிலும் மகத்தான வெற்றி பெறும் என்று ‘இந்து’ குழுமத் தலைவர் ‘இந்து’ என்.ராம், தெரிவித்துள்ளார்.

“அ.தி.மு.க முற்றிலும் துடைத்தெறியப்படும்; தி.மு.க மாபெரும் வெற்றியை பெறும்” - ‘இந்து’ என்.ராம் ட்வீட்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழக சட்டமன்றத்திற்கான 16வது தேர்தல் வருகிற ஏப்ரல் 6ம் தேதி நடைபெற இருக்கிறது. இதில் 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் ஆளும் அ.தி.மு.கவால் தமிழக வளர்ச்சிக்கு என எந்த ஒரு நன்மையும் விளையாததால் ஆட்சி மாற்றத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள் தமிழக மக்கள்.

இதற்காக திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வாக்களிக்கவே தமிழக மக்களின் எண்ணோட்டமாக உள்ளது. இப்படி இருக்கையில் டைம்ஸ் நவ் நடத்திய கருத்துக்கணிப்பிலும் அதிமுக தோல்வியை தழுவி தி.மு.க அபரிமிதமான வெற்றியை பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனை உறுதிப்படுத்தும் விதமாக தி.மு.கவின் தேர்தல் அறிக்கைகளும், தமிழகத்தை வளர்ச்சிப்பாதைக்கு இட்டுச் செல்லும் வகையிலான 7 உறுதிமொழிகளும் உள்ளது என அரசியல் நோக்கர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் ஆளுங்கட்சி முற்றிலுமாக துடைத்தெறியப்படும். தி.மு.க. கூட்டணி 234 தொகுதிகளிலும் மகத்தான வெற்றி பெறும் என்று ‘இந்து’ குழுமத் தலைவர் ‘இந்து’ என்.ராம், தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ‘இந்து’ என்.ராம் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:- "பொது கருத்துக்கணிப்புகள் உள்ளிட்ட அனைத்துமே தி.மு.க. மற்றும் தி.மு.க. தலைமையிலான கூட்டணியே நடைபெற இருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றி பெறும். அதன்படி, மாநிலம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலுமே அதற்கு முழுமையான வெற்றி என மாறிவிடும் என்பதோடு, ஆளும்கட்சி முற்றிலுமாக துடைத்தெறியப்பட்டுவிடும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories