தேர்தல் 2024

கடும் பின்னடைவை சந்தித்த பாஜக... தலைவர் பதவியில் இருந்து நீக்கப்படும் JP நட்டா ? - பாஜகவினர் அதிர்ச்சி !

தேர்தலில் பாஜக பெரும் பின்னடைவை சந்தித்த நிலையில், பாஜக தேசிய தலைவராக இருக்கும் JP நட்டாவை, தலைவர் பதவியில் இருந்து நீக்க தலைமை ஆலோசிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடும் பின்னடைவை சந்தித்த பாஜக... தலைவர் பதவியில் இருந்து நீக்கப்படும் JP நட்டா ? - பாஜகவினர் அதிர்ச்சி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற 18 ஆவது மக்களவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை கடந்த ஜூன் 4-ம் தேதி நடைபெற்ற நிலையில், இதில் இந்தியா கூட்டணி 234 இடங்களையும் பாஜக கூட்டணி 292 இடங்களையும் பிடித்துள்ளது. பாஜக தனித்து 240 தொகுதிகளில் வெற்றி பெற்றாலும் தனி பெரும்பான்மை கிடைக்காத நிலையில், கூட்டணி கட்சிகளோடு இணைந்து ஆட்சியை பிடிக்கும் நிர்பந்தத்தில் பாஜக உள்ளது.

இதனிடையே தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி 40-க்கு 40 என்று வென்று அசத்தியுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசுக்கு கிடைத்த மக்களின் மிகப்பெரிய அங்கீகாரமாக இது பார்க்கப்படுகிறது. தொடர்ந்து நாடு முழுவதுமே மக்கள் இந்தியா கூட்டணிக்கு தங்கள் அமோக ஆதரவை தெரிவித்துள்ளனர்.

கடும் பின்னடைவை சந்தித்த பாஜக... தலைவர் பதவியில் இருந்து நீக்கப்படும் JP நட்டா ? - பாஜகவினர் அதிர்ச்சி !

குறிப்பாக பாஜக ஆளும் உத்தர பிரதேசத்தில் இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. இதற்கு அனைவரும் பாராட்டுகளும் வாழ்த்துகளும் தெரிவித்து வரும் நிலையில், பாஜக மாநிலத்திலேயே பாஜகவுக்கு எதிர்ப்பலைகள் எழுந்துள்ளதை மோடிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. மக்களின் இந்த பெரும் எழுச்சிக்கு காரணம் இந்தியா கூட்டணியின் ஒற்றுமை மட்டுமே.

இது தங்கள் கோட்டை என்று மாற்தட்டிக்கொள்ளும் பாஜக, தான் ஆளும் உத்தர பிரதேசத்தில் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. 80 தொகுதிகளை கொண்ட உத்தர பிரதசத்தில் இந்தியா கூட்டணி 45 இடங்களையும் பாஜக 33 இடங்களையும் பெற்றுள்ளது. பாஜகவினருக்கு பெரும் பின்னடைவாக இந்த நிகழ்வு பார்க்கப்படுகிறது.

மேலும் மோடியும், தான் போட்டியிட்ட வாரணாசி தொகுதியில் பல மணி நேரம் 8 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் பின்னிலையில் இருந்து வந்த நிலையில், வெறும் 1.52 லட்சம் வாக்கு வித்தியாசத்திலேயே வெற்றி பெற்றுள்ளார். கடந்த முறை 4.79 லட்சம் வரை வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மோடி இந்த முறை, வெறும் 1.52 வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார்.

கடும் பின்னடைவை சந்தித்த பாஜக... தலைவர் பதவியில் இருந்து நீக்கப்படும் JP நட்டா ? - பாஜகவினர் அதிர்ச்சி !

கடந்த 10 ஆண்டுகால மோடியின் ஆட்சிக்கு மக்கள் கொடுத்த பதிலடியாகதான் இதனை பார்க்க முடிகிறது. ஆட்சியில் இருந்தபோது மட்டுமின்றி, தேர்தல் பிரசாரத்தின்போதும், மோடி தனது வெறுப்பை மட்டுமே மக்களிடம் விதைத்தார். தென் மாநிலங்களில் பாஜக வெற்றி பெறாது என்பது நாடு அறிந்த ஒன்றாக இருந்தபோதிலும், வட மாநிலங்களில் குறிப்பாக உத்தர பிரதேசத்தில் பாஜகவின் பெரும் தோல்வி நாட்டையே பெரும் ஆனந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

எந்த ஆண்டும் இல்லாதது போல் இந்த ஆண்டு பாஜக பெரும் பங்கை கொடுத்தது. பிரசாரத்திற்காக ஒவ்வொரு மாநிலத்திலும் குறிப்பாக தமிழ்நாட்டில் நாள் கணக்காக வருகை தந்தார் பிரதமர் மோடி. எனினும் பாஜகவின் பருப்பு பல பகுதிகளில் வேகவில்லை. எல்லாவற்றையும் விட உத்தர பிரதேசத்தில் பாஜகவின் இந்த மாபெரும் தோல்வி பெரிய அடியாக பாஜகவுக்கு அமைந்துள்ளது.

ஜெ.பி.நட்டா, மோடி, சிவராஜ் சிங் சௌகான்
ஜெ.பி.நட்டா, மோடி, சிவராஜ் சிங் சௌகான்

இந்த நிலையில், பாஜகவின் தேசிய தலைவரான ஜெ.பி.நட்டாவை நீக்கிவிட்டு புதிய தலைவரை கொண்டு வர பாஜக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும், தற்போது விதிஷா தொகுதியில் வெற்றி பெற்று எம்.பியாகியுள்ள சிவராஜ் சிங் சௌகானை கட்சி தலைவராக்க பாஜக ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பாஜக தலைமை விரைவில் அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலில் பாஜக 240 தொகுதிகளை பெற்று தனிப்பெரும்பான்மையை இழந்த நிலையில், சுமார் 11 கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைக்க முனைப்பு காட்டி வருகிறது. அதிலும் சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ் குமாரின் ஆதரவு பாஜகவுக்கு பெரும்பாலும் தேவைப்படுகிறது. ஆனால் முக்கிய அமைச்சர்கள் பதவி, சபாநாயகர் பதவி தங்களுக்கு வேண்டும் என்று இரு கட்சிகளும் வலியுறுத்தி வருவதனால் பாஜவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories