நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற 18 ஆவது மக்களவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று (ஜூன் 4) தொடங்கி நடைபெற்று வருகிறது. 10 ஆண்டுகால பாசிச பா.ஜ.க ஆட்சியை வீழ்த்துதுவதற்காக எதிர்க்கட்சிகள் இணைந்து ’இந்தியா’ என்ற கூட்டணியை உருவாக்கி தேர்தலில் களம் கண்டுள்ளனர்.
கடந்த ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதியோடு நிறைவடைந்த தேர்தலின் வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. 543 தொகுதிகளில் ஏற்கனவே குஜராத்தின் சூரத் தொகுதியில் பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட நிலையில், மீதமிருக்கும் 542 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த India Today உடன் இணைந்து கருத்துக்கணிப்புகளை வழங்கிய AxisMyIndia-வின் நிறுவனர் லைவ் ஷோவில் கதறி அழுத காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ஜூன் 1-ம் தேதி வாக்குப்பதிவு நிறைவு நாளில் வெளியான Exit poll-ல் பாஜகவுக்கு சாதகமாக கருத்துக்கணிப்புகள் வெளியானது. சொல்லி வைத்தார்போல், பல நிறுவனங்கள் பாஜக 370-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெரும் என்று கூறியிருந்தது.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பானது மக்கள் மத்தியில் பாஜக ஒரு பிம்பத்தை உருவாக்கும் முயற்சியில் காசு கொடுத்து, இது போன்ற கருத்துக்கணிப்புகளை வெளியிட்டது என்று எதிர்க்கட்சிகள் கண்டனமும் விமர்சனமும் தெரிவித்தது. தொடர்ந்து இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில், பாஜக பின்னடைவையும், இந்தியா கூட்டணி முன்னிலையிலும் இருந்து வருகிறது.
இந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை வெளியிட்ட நிறுவனங்களில் முக்கிய நிறுவனமான AxisMyIndia தனது கணிப்பு தவறு என்பதால், அதன் நிறுவனர் அழுதுள்ளார். நேரலையில் இன்று வாக்கு எண்ணிக்கை விவரங்கள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், India Today-வின் நேரலையில் Axis My India-வின் நிறுவனர் பிரதீப் குப்தா அழுதுள்ளார்.
பாஜக சுமார் 350-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெரும் என்று கருத்துக்கணிப்புகளை வெளியிட்டதால், தற்போது 300-ஐ கூட தொடாத நிலையில், நேரலையில் கதறி அழுதார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பலர் மத்தியிலும் பல்வேறு கருத்துகளை பெற்று வருகிறது.