நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், இன்று 3-ம் கட்ட தேர்தல் 93 மக்களவைத் தொகுதிகளுக்கு நடைபெற்று வருகிறது. இதனை முன்னிட்டு மக்களுக்கு ஆரவாரமாக தங்கள் வாக்கை செலுத்தி வருகின்றனர். மக்கள் பெரும்பாலும் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், பாஜக பல தில்லுமுல்லு வேலைகளில் ஈடுபட்டு வருகிறது.
மோடி உள்ளிட்ட பாஜகவினர் தேர்தல் பிரசாரத்தின்போது, இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்பு பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் இஸ்லாமியர்களின் வாக்கு பாஜகவுக்கு எதிராக இருக்கிறது. எனவே இதனை தடுக்க பாஜகவினர் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று நடைபெற்ற வாக்குப்பதிவின்போது இசுலாமியர்கள் மீது பாஜக போலீசார் தடியடி நடாத்தியுள்ளது.
உத்தர பிரதேசத்தின் சம்பல் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் இஸ்லாமியர்கள் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர். எனவே அங்கிருக்கும் அவர்கள் தங்கள் வாக்கை செலுத்துவதற்கு அப்பகுதி போலீசார் மறுத்து தடுத்து வருகிறது. மேலும் அவர்கள் மீது தடியடி நடத்தியுள்ளனர். அதோடு வாக்காளர்களின் வாக்கு அட்டைகளை வாங்கி வைத்துக்கொள்வதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
மேலும் இந்த சம்பவத்தை தட்டிக் கேட்ட சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் ஜியா உர் ரஹ்மானை போலீசார் தாக்கி அழைத்து சென்றனர். பாஜக ஆளும் மாநிலத்தல் போலீசாரின் இந்த செயல் தற்போது கடும் கண்டனங்களை எழுப்பி வருகிறது. ஜனநாயக நாட்டில் இதுபோன்ற அக்கிரமத்தை பலரும் கண்டித்து வருகின்றனர்.