தி.மு.க

“ஆரசியல் சாசனத்திற்கு ஆபத்து வந்திருக்கிறது” - திமுக சட்டக்குழு கருத்தரங்கில் ஆ.ராசா பேச்சு!

அரசியல் சாசனத்தில் அடிப்படைப் பண்புகளை மாற்றக்கூடாது என்று சட்டப் போராட்டம் நடத்திய முதன்மையான கட்சி திராவிட முன்னேற்றக் கழகம் எனக் கூறினார்.

“ஆரசியல் சாசனத்திற்கு ஆபத்து வந்திருக்கிறது” - திமுக சட்டக்குழு கருத்தரங்கில் ஆ.ராசா பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டக்குழு சார்பில் சட்ட கருத்தரங்கம் நடைபெற்றது.

இதில், பங்கேற்று பேசிய தி.மு.க. துணை பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ..ராசா மேடைப்பேச்சின் விவரம் பின்வருமாறு:-

எத்தனை இயக்கங்கள் , எந்த அரசு இது போன்ற சட்ட கருத்தரங்கம் நடத்தி இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால், சட்ட கருத்தரங்கை நடத்த இருக்கும் முழு தகுதி திராவிட இயக்கத்திற்கு உண்டு என்பதை எடுத்துரைத்தார்.

அரசியல் சட்டத்திற்கு என்ற ஒரு ஒழுங்குமுறையை வகுத்திருக்கிறார்கள். பல்கிவாலா அவரின் உழைப்பு மற்றும் சட்ட உரிமைகள் நிலை குறித்து தெரிவித்தார். அடிப்படை சட்ட திருத்தங்களை, முகப்பு உள்ள கூறுகளை நாடாளுமன்றத்தில் ஒரு சட்டம் இயற்றினால் தவறு என்று கூறுவதற்கு உச்சநீதிமன்றத்திற்கு உரிமை இருக்கிறது.

இது போன்ற அடிப்படைத் தன்மை மாற்றக்கூடாது என்று கூறியதற்கு இந்திரா காந்தி அம்மையார் பிரதமராக இருந்த போது அதை ஒப்புக் கொண்டுள்ளார். இறையாண்மைக்கு ஆபத்து வந்தபோது திராவிட முன்னேற்றக் கழகம் சுருக்கிக் கொள்ளவில்லை.

சீனா படையெடுத்த போது பாகிஸ்தான் படையெடுத்தபோது, சோஷியலிசத்தை காக்க முத்தமிழ் அறிஞர் கலைஞர், நாடாளுமன்றத்திற்கு கடிதம் எழுதி வாக்கெடுப்பு சாதகமாக அமையும் என்று நிறைவேற்றினார்.

பிராந்திய கட்சியாக திராவிட முன்னேற்றக் கழகம் இருந்தாலும் கூட 1973 ல் அடிப்படை சட்ட சத்தங்களை (ஃபண்டமெண்டல் ரைட்ஸ் )என்று கூறக் கூடிய அரசியல் சாசனத்தில் அடிப்படைப் பண்புகளை மாற்றக்கூடாது என்று சட்டப் போராட்டம் நடத்திய முதன்மையான கட்சி திராவிட முன்னேற்றக் கழகம்.

இசைக் கலைஞர், அரசியல் சட்டத்தை காப்பாற்றுங்கள் என்று கடைசி நம்பிக்கை தமிழகத்தில் தான் உள்ளது என்று கூறினார் அந்த கர்நாடகாவில் இருந்து வந்த எழுத்தாளர். தற்பொழுது அரசியல் சட்டத்திற்கு ஆபத்து வந்திருக்கிறது அதை காப்பாற்றக்கூடிய பணியில் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு இருக்கிறது.”

எனக் குறிப்பிட்டார்.

banner

Related Stories

Related Stories