தி.மு.க

அ.தி.மு.கவின் கரைவேட்டி கட்டாத நிர்வாகிகளாக செயல்படும் காவல்துறை: தி.மு.க சார்பில் உண்ணாவிரதப் போராட்டம்!

6 மாதங்களில் ஆட்சி மாறும், அப்பொழுது உங்களின் ஒவ்வொரு அநியாயச் செயலுக்கும் பதில் சொல்லியே தீர வேண்டியிருக்கும் என அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.கவின் கரைவேட்டி கட்டாத நிர்வாகிகளாக செயல்படும் காவல்துறை: தி.மு.க சார்பில் உண்ணாவிரதப் போராட்டம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கரூர் மாவட்ட தி.மு.க சார்பில் 50 இடங்களில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்கும் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியது. காவல்துறையினரின் பொய் வழக்குகளை கண்டித்தும், ஆளுங்கட்சியினரின் அராஜக போக்கிற்க்கு காவல்துறையினர் துணைபோவதாக குற்றச்சாட்டி, தி.மு.க சார்பில் இன்று உண்ணாநிலை அறப்போராட்டம் நடைபெற்று வருகிறது.

கரூர் வடக்கு நகர தி.மு.க சார்பில் வெங்கமேட்டில் அண்ணா சிலை அருகில் நடைபெற்ற போராட்டத்தில், அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி கலந்துகொண்டு உண்ணா விரதத்தை தொடங்கி வைத்தார். முன்னதாக இதுதொடர்பாக அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி வெளியிட்டுள்ள அறிக்கையில், “அடிமை அ.தி.மு.க அரசின் கரைவேட்டி கட்டாத நிர்வாகிகளாக கரூர் மாவட்ட காவல்துறையினர் அநீதி இழைத்து வருகிறார்கள்.

தி.மு.கவின் நிர்வாகிகளை, களப்பணியாளர்களை, தளபதியின் விசுவாசிகளை மிரட்டிப் பார்ப்பது, அப்படியும் அடிபணியாதவர்கள் மீது வழக்குகள், கைதுகள், காவல்நிலையத்தில் நிகழ்த்தும் மனித உரிமை மீறல் என எல்லாவற்றையும் அப்பட்டமாகச் செய்து வரும் காவல்துறையின் ஈரல் அழுகிவிட்டது.

அ.தி.மு.கவின் கரைவேட்டி கட்டாத நிர்வாகிகளாக செயல்படும் காவல்துறை: தி.மு.க சார்பில் உண்ணாவிரதப் போராட்டம்!

இதையெல்லாம் கண்டித்து உண்ணாவிரதம், வழக்கு என சட்டத்தின் பாதையில் சென்று கொண்டிருக்கிறோம். இந்நிலையில் தி.மு.கவின் மாவட்ட நிர்வாகியை அழைத்து ‘உண்ணாவிரதத்துக்கு எதிராக சிலரைத் தீக்குளிக்கத் தூண்டிவிடுவோம்’ என்று காவல்துறையின் உயரதிகாரியே பேசியிருக்கிறார்.

நாடாளுமன்றத் தேர்தலில் நடந்த ஆளுங்கட்சியின் முறைகேடுகள், கொரோனா காலத்திலும் ஆளுங்கட்சியினர் நூற்றுக்கணக்கானவர்களை அழைத்து நடத்தும் கூட்டங்கள் - பேரணிகளை வாய்மூடி மெளனித்து வேடிக்கை பார்த்தபடியே அவர்களின் கட்டளைகளை சிரமேற்கொண்டு செய்யும் காவல்துறையின் கறைபடிந்த அதிகாரிகளுக்குச் சொல்லிக் கொள்வது ஒன்றுதான் - நீங்கள் நடுநிலையாக நடக்கவில்லை; அதை எதிர்த்து அறவழியில் போராடிக் கொண்டிருக்கிறோம்.

அதையும் குலைத்திடும், முறையற்ற உங்களின் முயற்சிக்கும் சலசலப்புக்கும் தளபதியின் உடன்பிறப்புகளாகிய நாங்கள் அஞ்சமாட்டோம். நடுநிலை தவறிய காவல்துறையின் ஒவ்வொரு செயலையும் மக்கள் மன்றத்துக்கு எடுத்துச் செல்வோம். இன்னமும் ஆறு மாதங்களில் ஆட்சி மாறும், அப்பொழுது உங்களின் ஒவ்வொரு அநியாயச் செயலுக்கும் பதில் சொல்லியே தீர வேண்டியிருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories