கோவை மாநகர் கிழக்கு மாவட்ட தி.மு.க நிர்வாகக் குழுக்கூட்டம், மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ. தலைமையில் நேற்று (ஆகஸ்ட் 4) காணொலிக் காட்சி மூலம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கழக சொத்து பாதுகாப்புக் குழு துணைத்தலைவர் பொங்கலூர் நா.பழனிசாமி, பொறுப்புக்குழு உறுப்பினர்கள் பி.நாச்சிமுத்து, ச.குப்புசாமி, உமாமகேஷ்வரி, பொதுக்குழு உறுப்பினர்கள் மு.மா.ச.முருகன், மா.மகுடபதி, சி.வி.தீபா, சி.டி.டி ராஜராஜேஸ்வரி, சட்டத்துறை இணைச் செயலாளர் கே.எம்.தண்டபாணி , வழக்கறிஞர் பி.ஆர்.அருள்மொழி , பகுதிக் கழகச் செயலாளர்கள் எஸ்.எம்.சாமி, ஆர்.எம்.சேதுராமன், மார்கெட் எம்.மனோகரன், வ.ம. சண்முகசுந்தரம், வி.பி.செல்வராஜ், குனியமுத்தூர் லோகு, கே.எம்.ரவி, மா. நாகராஜ், மாவட்ட அணி அமைப்பாளர்கள், வட்டக் கழக செயலாளர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் விவரம் பின்வருமாறு :
கடந்த 30.07.2020 அன்று தி.மு.கழகத் தலைவர் தலைமையில் நடைபெற்ற , கழக மாவட்டச் செயலாளர்கள் - நாடாளுமன்ற உறுப்பினர்கள் - சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர்கள் பங்கேற்ற கூட்டத்தில் , “தலைவர் கலைஞரின் இரண்டாவது நினைவு தினமான 7.8.2020 அன்று, ஏழை- எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் செய்ய உகந்த நாளாக மாற்றிக் காட்ட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்தத் தீர்மானத்தின் படி கடந்த 31.07.2020 அன்று கோவை மாநகர் கிழக்கு மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து பகுதி மற்றும் வட்ட செயலாளர்களிடம் தொடர்பு கொண்டு, அவரவர் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் முத்தமிழறிஞர் கலைஞரின் 2ஆம் நினைவு நாளை, கழகத் தலைவர் அறிவித்தது போல நலத்திட்ட உதவிகள் வழங்கி நடத்திட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்பட்டது.
”என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே” என்ற ஒரே ஒரு வாக்கியத்தால் லட்சக்கணக்கான தொண்டர்களைக் கட்டிப்போட்டு வைத்திருந்தவர், தனக்கு முன்பும், பின்பும் யாரும் எட்ட முடியாத சாதனைகளைப் புரிந்துவிட்டு அமைதியாக இன்று ஓய்வெடுத்துக் கொண்டிருப்பவர். இந்திய நாட்டில் தனித்துவம் மிக்க மாநிலமாக தமிழ்நாட்டை வடிவமைத்த சிற்பிகளுள் ஒருவர்.
செம்மொழிக் காவலர், முத்தமிழ் அறிஞர், தலைவர் கலைஞர் அவர்களின் இரண்டாவது நினைவு தினமான 07.08.2020 ( வெள்ளிக்கிழமை ) அன்று, கோவை மாநகர் கிழக்கு மாவட்டத்திற்குட்பட்ட மாவட்டப் பொறுப்புக்குழு உறுப்பினர்கள், தலைமைக்கழக நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு , பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதிக்கழகச் செயலாளர்கள், வட்டக்கழகச் செயலாளர்கள், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், கழக முன்னோடிகள், செயல்வீரர்கள், கழகத் தோழர்கள் அனைவரும் அவரவர் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் கழகத் தலைவர் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க, “நோய்த் தொற்றிலிருந்து தமிழக மக்களைக் காப்பாற்றிட இரவு பகல் பாராது கண் துஞ்சாது தங்களின் குடும்ப சுகதுக்கங்களை எல்லாம் துறந்து மறந்து, தியாக உணர்வுடன் பணியாற்றிய - பணியாற்றிவரும் “கொரோனா போராளிகள்” என்று அழைக்கப்படும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள், மக்கள் நல்வாழ்வுத் துறை ஊழியர்கள், காவல்துறையினர், தூய்மைப் பணியாளர் உள்ளிட்ட அனைத்து முன்களப் பணியாளர்களுக்கும் சிறப்பு செய்ய வேண்டும் என்றும் , வாழ்வாதாரத்தைத் தொலைத்துவிட்டு ஆங்காங்கே வறுமையின் கோரப்பிடியில் சிக்கிச் சுழலும் ஏழை- எளிய மக்களுக்கு, சமூக இடைவெளி கடைப்பிடித்து , நலத்திட்ட உதவிகளை வழங்கி, 07.08.2020 (வெள்ளிக்கிழமை) அன்று , தலைவர் கலைஞர் அவர்களின் நினைவு நாளை, தக்க வகையில் நெஞ்சில் ஏந்துவோம்” என்றும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது.