தடம் மாறா வரலாறு!
- கவிஞர் அறிவுமதி
..........................................
தன்மான அடலேறே!
தடம்
மாறா
வரலாறே!
◾
இளம்
வயதில்
உன்
பேச்சை
எப்படி
நான்
குடித்திருப்பேன்!
என்
ஊரில்
உன்
நூல்கள்
எத்தனை
நாள்
படித்திருப்பேன்!
◾
பெரியாரைப்
பின்
தொடர்ந்த
பிழையற்ற
புத்தகமே!
அண்ணாவின்
அடி
நடந்த
ஆற்றல்
மிகு
வித்தகமே!
◾
அண்ணாமலை
கொடுத்த
அருந்
தமிழின்
பேராசான்!
என்னாளும்
பகுத்தறிவை
எடுத்
தியம்ப
நா
கூசான்!
◾
எத்தனை
நாள்
எத்தனை
ஊர்
காடென்றும்
பார்க்காமல்
கரம்பென்றும்
பார்க்காமல்
கால்
நடையாய்
ஓடோடி
களத்
தமிழை
விதைத்தவரே!
அமைச்சரென
இருந்தாலும்
அமைச்சரவை
இழந்தாலும்
கடுகளவும்
பிறழாமல்
கட்சியினை
மதித்தவரே!
கலைஞருடன்
உழைத்தவரே!
◾
எம்
வயசுப்
பிள்ளையெலாம்
உம்மால்
தாம்
உருவானோம்!
இன்று
வரை
இழை
பிசகா
கொள்கையிலே
உரமானோம்!
◾
காலமெலாம்
எங்களுக்கே
கனிவோடு
வகுப்பெடுத்தாய்!
காலம்
வந்து
வயது சொல்ல
கட்டாய
விடுப்பெடுத்தாய்!
◾
செய்தித் தாள்
விற்றவரின்
செல்ல
மகன்
'வரலாறு'!
அட...
செத்தாலும்
வற்றாது
‘அன்பழகன்’
புகழாறு!
◾◾
- கவிஞர் அறிவுமதி