தி.மு.க

விவசாயிகள் விரோத பா.ஜ.க, அ.தி.மு.க அரசுகளை கண்டித்து தி.மு.க சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

விவசாயிகள் விரோத பா.ஜ.க, அ.தி.மு.க அரசுகளை கண்டித்து தஞ்சை, நாகை, திருவாரூர், கடலூர் மாவட்டத் தலைநகரங்களில் தி.மு.க சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

விவசாயிகள் விரோத பா.ஜ.க, அ.தி.மு.க அரசுகளை கண்டித்து தி.மு.க சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

விவசாய நிலங்களை பாழ்படுத்தும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை திரும்பப் பெற்று, காவிரி டெல்டாவை ‘பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக’ அறிவிக்க வலியுறுத்தியும், விவசாயிகள் விரோத பா.ஜ.க, அ.தி.மு.க அரசுகளை கண்டித்தும் தஞ்சை, நாகை, திருவாரூர், கடலூர் மாவட்டத் தலைநகரங்களில் தி.மு.க.சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழகத்தில் விவசாயிகள் - பொதுமக்களிடையே எழுந்துள்ள கொந்தளிப்பைப் பற்றிச் சிறிதும் கவலை கொள்ளாமல் மத்திய பா.ஜ.க அரசு, 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள 341க்கும் மேற்பட்ட ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கான ஆய்வுக் கிணறுகள் தோண்ட சுற்றுச்சூழல் அனுமதி, மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் ஆகியவை தேவையில்லை என்று, 16.1.2020 அன்று அறிவித்துள்ளது. காவிரி டெல்டா பகுதிகளை பாலைவனமாக்கி, விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் மாபெரும் துரோகமாக திராவிட முன்னேற்றக் கழகம் இதனைக் கருதுகிறது.

விவசாயிகள் விரோத பா.ஜ.க, அ.தி.மு.க அரசுகளை கண்டித்து தி.மு.க சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

மத்திய பா.ஜ.க அரசின் இந்த முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஒருபுறம் பிரதமருக்கு கடிதம் எழுதுவதும், அவரது அமைச்சரவையிலேயே இருக்கும் சுற்றுச்சூழல் அமைச்சர் கருப்பணன் “அனுமதி மற்றும் கருத்துக் கேட்புக் கூட்டங்கள் எல்லாம் நடத்த தேவையில்லை" என்று இன்னொரு புறம் மத்திய அரசுக்கு நேரெதிரே கடிதம் எழுதி கோரிக்கை வைப்பதுமாக, விவசாயிகளை ஏமாற்றும் ஒரே நோக்கத்துடன் ஒரு கபட நாடகத்தை நடத்தி, ஹைட்ரோகார்பன் திட்டங்களைத் தடுத்து நிறுத்திட முயலாமல், அ.தி.மு.க அரசு முரண்பாடுகளின் மொத்த உருவமாகத் திகழ்கிறது.

எவ்வித அனுமதியும் பெறாமல், சுற்றுச்சூழல் சட்டங்களுக்கு உட்படாமல் இதற்கு முன் இருந்த எந்த மத்திய அரசும், இப்படி சர்வாதிகாரமாக ஹைட்ரோ கார்பன் திட்டங்களை, விவசாய நிலங்களை அழித்து நிறைவேற்றிட எண்ணியதில்லை. ஆனால் தமிழக உரிமைகளுக்கும், விவசாயிகளின் நலன்களுக்கும் முற்றிலும் விரோதமாக மத்திய பா.ஜ.க அரசு தன்னிச்சையாகச் செயல்பட்டு, தமிழகத்தில் உள்ள வேளாண் பகுதிகளை பாலைவனமாக திட்டமிட்டு மாற்றிடத் துணிந்துள்ளது.

விவசாயிகள் விரோத பா.ஜ.க, அ.தி.மு.க அரசுகளை கண்டித்து தி.மு.க சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

எனவே, மத்திய பா.ஜ.க அரசு மற்றும் மாநில அ.தி.மு.க அரசின் விவசாயிகள், வெகுமக்கள் விரோத செயல்களை கண்டித்தும் - ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு, சுற்றுச்சூழல் அனுமதி, மக்களின் கருத்து கேட்பு தேவையில்லை என்ற ஆணையை திரும்பப் பெற வலியுறுத்தியும், விவசாய நிலங்களை பாழ்படுத்தும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களையும் திரும்பப் பெற்று, காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டுமென்றும், 2020, ஜனவரி 28 (செவ்வாய்கிழமை) அன்று தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர் ஆகிய மாவட்டத் தலைநகரங்களில், தி.மு.க. சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கழக நிர்வாகிகள், உடன்பிறப்புகள் மற்றும் விவசாயிகள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுநல அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், பெருமளவில் கலந்துகொண்டு, ஆர்ப்பாட்டத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories