தி.மு.க

“கலைஞர் அருங்காட்சியகம் தகப்பனுக்காக அல்ல; தலைவனுக்காக” - மு.க.ஸ்டாலினுக்கு வைரமுத்து புகழாரம்!

திருவாரூரில் முத்தமிழறிஞர் கலைஞருக்கு அருங்காட்சியகம் அமைப்பதற்காக கவிஞர் வைரமுத்து ஒரு லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார்.

“கலைஞர் அருங்காட்சியகம் தகப்பனுக்காக அல்ல; தலைவனுக்காக” - மு.க.ஸ்டாலினுக்கு வைரமுத்து புகழாரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினை கவிப்பேரரசு வைரமுத்து இன்று நேரில் சந்தித்தார். அப்போது, திருவாரூரில் முத்தமிழறிஞர் கலைஞரின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் வகையில் அருங்காட்சியகம் அமைப்பதற்காக ரூ.1 லட்சம் மதிப்பிலான காசோலையை மு.க.ஸ்டாலினிடம் வைரமுத்து அளித்தார்.

இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த வைரமுத்து, “முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த மண்ணில் அவருக்கு அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்று முடிவெடுத்து அதற்கான முன்னெடுப்புகளை முடுக்கிவிட்டிருப்பதற்காக மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவிக்க வந்தேன். தகப்பனுக்கான அருங்காட்சியகமாக இல்லாமல் ஒரு தலைவனுக்கான அருங்காட்சியகமாக அமையவேண்டும் என ஸ்டாலின் விரும்புகிறார்” எனத் தெரிவித்தார்.

மேலும், கலைஞருக்கான அருங்காட்சியகம் அனைத்து சிறப்பு வாய்ந்த அம்சங்களுடனும் அமையவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories