கடந்த 2016ம் ஆண்டு உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான படம் கெத்து. 'அப்போது 'கெத்து' என்பது தமிழ் சொல் அல்ல என தெரிவித்த அ.தி.மு.க அரசு, அப்படத்திற்கு கேளிக்கை வரி சலுகை வழங்க மறுத்தது.
இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட போது, சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள தமிழ் அகராதியில் 'கெத்து' என்ற வார்த்தை இல்லை எனவும் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் அளித்த விளக்கத்தின் படியும் இது தமிழ் சொல் அல்ல என தமிழக அரசு கூறியது.
இந்நிலையில், மா.பா. பாண்டியராஜன் கெத்து, வச்சு செய்வேன் என்னும் சொற்கள் சிலப்பதிகாரத்தில் இருந்தது என தெரிவித்துள்ளார். அமைச்சர் பாண்டியராஜனின் தற்போதைய கருத்தை திமுக எம்.பி. வில்சன் விமர்சித்துள்ளார்.
அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'கெத்து' தமிழ் வார்த்தை இல்லை எனக் கூறி உதயநிதி ஸ்டாலின் படத்திற்கு கேளிக்கை வரி சலுகை மறுத்த அதிமுக அரசு, 3 ஆண்டுகளுக்கு பிறகு 'கெத்து' தமிழ் வார்த்தை தான் என கண்டுபிடித்துள்ளது! வாழ்த்துக்கள்! இதை தான் நான் வாதாடி 2016 ஆண்டே உயர் நீதிமன்றமும் தீர்ப்பளித்தது " என தெரிவித்துள்ளார்.