தி.மு.க

தமிழ் மொழியை புறக்கணித்த ரயில்வேக்கு எதிர்ப்பு: சென்னையில் கனிமொழி தலைமையில் தி.மு.கவினர் போராட்டம் !

ரயில்வே துறையில் தமிழ் மொழி புறக்கணிக்கப்படுவதைக் கண்டித்து சென்னையில் உள்ள தெற்கு ரயில்வே அலுவலகத்தை முற்றுகையிட்டு தி.மு.க சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.

தமிழ் மொழியை புறக்கணித்த ரயில்வேக்கு எதிர்ப்பு: சென்னையில் கனிமொழி தலைமையில் தி.மு.கவினர் போராட்டம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தபால் துறை அலுவலர்களுக்கான தேர்வில் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகள் புறக்கணிக்கப்பட்டதற்கு வலுவான எதிர்ப்பு எழுந்த நிலையில், தமிழ் மொழியிலும் தேர்வு நடத்தப்படும் என நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்திருந்தது.

தற்போது, மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறியது போன்று ரயில்வே ஊழியர்களுக்கு நடத்தப்படும் துறை சார்ந்த தேர்வுகளை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்தத் தேவையில்லை என்றும், ஆங்கிலத்திலும் இந்தியிலும் மட்டும் நடத்தினால் போதும் என ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.

இந்தியை வளர்க்கும் விதமாக ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏற்கெனவே தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், தி.மு.க மகளிரணி செயலாளரும், மக்களவை உறுப்பினருமான கனிமொழி தலைமையில் சென்னை தெற்கு ரயில்வே அலுவலகத்தை முற்றுகையிட்டு தி.மு.கவினர் போராட்டம் நடத்தினர்.

தமிழ் மொழியை புறக்கணித்த ரயில்வேக்கு எதிர்ப்பு: சென்னையில் கனிமொழி தலைமையில் தி.மு.கவினர் போராட்டம் !

இந்த போராட்டத்தில், கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, மாவட்ட செயலாளர் சேகர் பாபு, மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் கலாநிதி வீராசாமி, வில்சன், தொ.மு.ச சண்முகம், எம்.எல்.ஏக்கள் தாயகம் கவி, ப.ரங்கநாதன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.

போராட்டத்தின் போது, மத்திய பாஜக அரசின் இந்தி திணிப்புக்கு எதிராக பலத்த கண்டனங்களை முழக்கங்களாக எழுப்பினர். மோடி ஆட்சியில் இந்தியை திணிக்க தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கண்டனம் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சுய மரியாதையோடும், தமிழ் உணர்வோடும் நடைபெற்று வரும் இந்த போராட்டம் தமிழகத்தோடு மட்டும் நின்றுவிடாமல் டெல்லி வரை தொடரும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மக்களுக்கு எதிராக எத்தனையோ அறிவிப்புகள் வந்திருந்தாலும், அவற்றை முறியடித்தவர்கள் தமிழக மக்கள் என குறிப்பிட்டார். இதனைத் தொடர்ந்து தெற்கு ரயில்வே பொது மேலாளரை சந்தித்து ரயில்வே வாரியத்தின் அறிவிப்புக்கு எதிராக கனிமொழி உள்ளிட்ட திமுகவினர் மனு அளித்தனர்.

banner

Related Stories

Related Stories