தி.மு.க

ஆர்.வி.ஜானகிராமன் உடலுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி!

புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வரும் தி.மு.கவின் செயல் திட்டக்குழு உறுப்பினருமான ஆர்.வி.ஜானகிராமன் மறைவுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.

ஆர்.வி.ஜானகிராமன் உடலுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தி.மு.கவை சேர்ந்த ஜானகிராமன் 1996 முதல் 2000 ஆம் ஆண்டு வரை புதுச்சேரி முதல்வராக இருந்துள்ளார். நெல்லித்தோப்பு தொகுதியில் இருந்து 5 முறை எம்.எல்.ஏ-வாக தேர்வு செய்யப்பட்டவர் ஜானகிராமன். சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், தி.மு.க உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

உடல்நலக்குறைவால் பிம்ஸ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிந்தார். இவரது மறைவிற்கு அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்தனர்.

புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் ஆர்.வி.ஜானகிராமன் உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு இன்று நடைபெற்றது. அவரது சொந்த ஊராண விழுப்புரம் மாவட்டம் ஆலத்தூர் கிராமத்தில் ஆர்.வி.ஜானகிராமன் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

ஆர்.வி.ஜானகிராமனின் இறுதிச்சடங்கில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பங்கேற்றனர்.பின்னர் 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

banner

Related Stories

Related Stories