தி.மு.க

இந்தியாவின் வில்லன் மோடி - உதயநிதி ஸ்டாலின்

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பாக மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடும் தயாநிதி மாறனை ஆதரித்து நடிகர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். 

Udhayanithi Stalin
Udhayanithi Stalin
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பாக மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடும் தயாநிதி மாறனை ஆதரித்து நடிகர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார்.

Udayanithi Stalin & Dayanithi Maran
Udayanithi Stalin & Dayanithi Maran

அப்போது பேசிய அவர், “ தமிழகத்தில் நாளுக்கு நாள் மக்கள் கூட்டம் அதிகமாகிறது. தமிழகத்தில் இருப்பது மோடி எதிர்ப்பு அலை மட்டுமல்ல, ஸ்டாலின் ஆதரவு அலை. ஒன்று மட்டும் நிச்சயம், 18 -ம் தேதி மோடியை தமிழக மக்கள் வீட்டுக்கு அனுப்புவார்கள்.

நீட் தேர்வு, பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரி என மக்களுக்கு தேவை இல்லாத மக்கள் விரோதப் போக்கை மேற்கொண்டது மத்திய அரசு. மத்திய அரசின் கைக்கூலியாக தமிழக அரசு செயல்படுகிறது.

இந்தத் தேர்தலின் கதாநாயகன் திமுகவின் தேர்தல் அறிக்கை. இந்தியாவின் வில்லன் மோடி. வில்லனின் கைக்கூலிகள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம். அவர்களை கடுமையாக டயர் நக்கி என விமர்சனம் செய்தவர் அன்புமணி ராமதாஸ் ஆனால் அவர் தற்போது அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களிடம் 2 ஆண்டுகால சாதனை என்ன என கேட்டால் நான் 2 ஆண்டு முதல்வராக இருப்பதே சாதனைதான் என்கிறார்.

Udayanithi Stalin & Dayanithi Maran
Udayanithi Stalin & Dayanithi Maran

மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் அமைச்சரவையில் இருந்த போது மேதா நகர் பாலம்,வில்லிவாக்கம் சுரங்கப்பாதை,சாம்சங்,நோக்கியா போன்ற தொழிற்சாலைகள் வரக் காரணமானவர். பில்கேட்சையே தமிழகத்திற்கு கூட்டி வந்து முதலீடு கொண்டு வந்தவர்.

சென்னையில் உள்ள பல பாலங்கள் திமுக ஆட்சியில் கட்டப்பட்டது. சிப்காட் தொழிற்சாலை, கோயம்பேடு காய்கறி சந்தை என எல்லாம் கலைஞர் ஆட்சியில் கொண்டு வரப்பட்டது.

அம்மா வழி அரசு என மார்தட்டும் அதிமுக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து பேச முடியுமா இட்லிக்கு 1.5 கோடி பில் போட்டு திடீரென அம்மா செத்து விட்டார் என்றவர்கள். முதல்வரையே காப்பாற்ற முடியாதவர்கள் மக்களை காப்பாற்றுவார்களா? இவ்வாறு கூறினார்.

banner

Related Stories

Related Stories