சினிமா

IPL.. F1 ரேஸ்.. இப்போ HBO.. தொடர்ந்து வெளியேறும் முக்கிய நிறுவனங்கள்: சோக கடலில் மூழ்கும் Disney+ Hotstar

டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் இருந்து HBO நிறுவனம் வெளியேறவுள்ளதாக அறிவிப்பு வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

IPL.. F1 ரேஸ்.. இப்போ HBO.. தொடர்ந்து வெளியேறும் முக்கிய நிறுவனங்கள்: சோக கடலில் மூழ்கும் Disney+ Hotstar
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

நவீன உலகில் அனைத்தும் நவீனமயமாக்கப்பட்டதால் நாம் அன்றாட வாழ்வின் தேவையாக அமைகிறது. முன்பெல்லாம் கிரிக்கெட் விளையாட்டுக்களை முழுமையாக டிவியில், அல்லது ரேடியோ, அல்லது பேப்பர் மூலம் நம்மால் அறிய முடியும். ஆனால் இப்போது தொழில்நுட்ப வளர்ச்சியால் நம்மால் எது எங்கே எப்படி நடக்கிறது என்பதை இங்கிருந்தே பார்க்க முடிகிறது.

IPL.. F1 ரேஸ்.. இப்போ HBO.. தொடர்ந்து வெளியேறும் முக்கிய நிறுவனங்கள்: சோக கடலில் மூழ்கும் Disney+ Hotstar

அதோடு டிவி-க்கு பிறகு, யூடியூப், தற்போது ஓடிடி இப்படி ஒவ்வொரு தலைமுறையும் வளர்ச்சி அடைந்து வருகிறது. அதன்படி உலக அளவில் பிரபலமாக இருக்கும் ஓடிடி தளங்கள்தான் Netflix, அமேசான் பிரைம், Disney+ Hotstar என பல உண்டு. இதன் மூலம் மக்கள் தங்கள் பொழுபோக்கை கிழிக்கின்றனர்.

IPL.. F1 ரேஸ்.. இப்போ HBO.. தொடர்ந்து வெளியேறும் முக்கிய நிறுவனங்கள்: சோக கடலில் மூழ்கும் Disney+ Hotstar

அதோடு இந்த ஓடிடி தளங்களில் படங்கள், சீரிஸ், சீரியல் உள்ளிட்டவையை காணலாம். இதற்கு என்று தனியாக பணம் செலுத்த வேண்டும். இந்த பேக்கேஜ் 3, 6 மாதங்கள், ஒரு வருடம் என உண்டு. இந்த ஓடிடி தளங்களில் திரைப்படங்கள் மட்டுமின்றி, கிரிக்கெட், புட் பால், கபடி என விளையாட்டுகளையும் காணமுடியும்.

அதன்படி பிரபல ஓடிடி தளமான Disney+ Hotstar-ல் ஸ்போர்ட்ஸ் கிரிக்கெட் உள்ளிட்டவை ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த ஓடிடி தளத்தில் இருந்து அண்மையில் ஐபிஎல் விலகியது. தற்போது ஐபிஎல் தொடர் ஜியோ- வில் ஒளிபரப்பாகி வருகிறது. தொடர்ந்து கடந்த வாரம் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வந்த F1 ரேஸ் ஷோவும் அதிலிருந்து வெளியேறியது.

IPL.. F1 ரேஸ்.. இப்போ HBO.. தொடர்ந்து வெளியேறும் முக்கிய நிறுவனங்கள்: சோக கடலில் மூழ்கும் Disney+ Hotstar

இந்த நிலையில் தற்போது பிரபல HBO நிறுவனம் ஹாட்ஸ்டார் தளத்தில் இருந்து வெளியேறவுள்ளது. அதன்படி இந்த நிறுவனம் தங்கள் சீரிஸ் மற்றும் படங்களை இனி ஹாட்ஸ்டாருக்கு வழங்கப்போவது இல்லை. மேலும் அவர்கள் முன்பு வெளியிட்டிருந்த படங்கள் மற்றும் சீரிஸ்கள் ஹாட்ஸ்டார் தளத்தில் இருந்தும் நீக்கப்படவுள்ளது.

மேலும் HBO நிறுவனம் தயாரித்த சீரிஸ் மற்றும் படங்கள், ஹாட்ஸ்டார் தளத்தில் இந்த மாதம் (மார்ச்) 31-ம் தேதி வரை மட்டுமே காண முடியும். ஏப்ரல் 1-ம் தேதி முதல் இந்த நிறுவனத்தின் எந்த படைப்புகளும் ஹாட்ஸ்டார் தளத்தில் இருக்காது.

IPL.. F1 ரேஸ்.. இப்போ HBO.. தொடர்ந்து வெளியேறும் முக்கிய நிறுவனங்கள்: சோக கடலில் மூழ்கும் Disney+ Hotstar

HBO-வானது பழம்பெரும் நிறுவனமாகும். 1980-களில் இருந்தே படங்களை தயாரித்து வருகிறது. எப்படி தமிழ்நாட்டில் ஜெமினி ஸ்டுடியோஸ், ஏவிஎம் ஸ்டுடியோஸ் உள்ளதோ, அதேபோல் ஹாலிவுட்டில் பிரபல நிறுவனங்களில் ஒன்றுதான் இந்த HBO நிறுவனம். 80-களில் தொடங்கி தற்போது வரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்கள், சீரிஸ்கள், ஆவணப்படங்கள், காமெடி ஷோ, உள்ளிட்ட அதிகமானவை தயாரித்துள்ளது.

IPL.. F1 ரேஸ்.. இப்போ HBO.. தொடர்ந்து வெளியேறும் முக்கிய நிறுவனங்கள்: சோக கடலில் மூழ்கும் Disney+ Hotstar

முக்கியமாக சொல்ல வேண்டுமானால் 'Game of Thrones' சீரிஸ் உலக அளவு வரவேற்பை பெற்றது. இந்தியாவிலும் இதற்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இதனை தயாரித்தது இந்த நிறுவனம்தான். இனி இதுபோன்ற HBO-வின் சீரிஸ், படங்களை ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் காண இயலாது. தொடர்ந்து HBO நிறுவனம் SonyLiv, Amazon போன்ற மற்றொரு ஓடிடி தளத்தில் ஒப்பந்தம் செய்ய வாய்ப்பு உள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

IPL.. F1 ரேஸ்.. இப்போ HBO.. தொடர்ந்து வெளியேறும் முக்கிய நிறுவனங்கள்: சோக கடலில் மூழ்கும் Disney+ Hotstar

அதோடு இந்த நிறுவனம் HBO Max என்ற ஓடிடி தளம் ஒன்றையும் வைத்துள்ளது. இது இந்தியா போன்ற சில நாடுகளில் பயன்படுத்த முடியாது. இருப்பினும் விரைவில் இந்தியாவிலும் இந்த ஓடிடி தளம் பயன்பாட்டுக்கு வரும் என்று கூறப்படுகிறது. ஒருவேளை இந்தியாவிலும் இந்த தளம் பயன்பாட்டில் வந்தால், HBO நிறுவனத்தின் அனைத்து படங்கள் மற்றும் சீரிஸ்கள் HBO Max-ல் ஒளிபரப்பு செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி தொடர்ச்சியாக முக்கிய நிறுவனங்கள் வெளியேறுவதால் ஹாட்ஸ்டார் நிறுவனம் முக்கிய முடிவுகள் எடுக்கக்கூடிய நிர்பந்தத்தில் தள்ளப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories