அஜித் நடிப்பில் நேற்று வெளியாகி திரையரங்கில் வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கும் படம்தான் துணிவு. ரசிகர்கள் மத்தியில் பெரிதளவு எதிர்பார்க்கப்பட்ட இந்த படத்தின் ட்ரைலர் கடந்த ஆண்டு இறுதி நாளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
எச்.வினோத் இயக்கத்தில் அஜித்துடன் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கொக்கைன், ஜி.எம்.சுந்தர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நேற்று வெளியான இப்படம் பெரிதளவு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வரும் நிலையில், இப்படத்தில் அஜித்தின் டான்ஸ் பற்றி பலரும் பாராட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், படம் வெளியீட்டிற்கு பிறகு தற்போது துணிவு படத்தின் இயக்குநர் எச்.வினோத் தனியார் youtube சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். அதில் பேங்க் கொள்ளையின்போது அஜித்தின் நடனம் குறித்தும், அதன் பின்புலம் குறித்தும் தகவல்களை பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து எச் வினோத் அளித்த பேட்டியில், "அஜித்தின் அந்த டான்ஸ் ஸ்பாட்டில் உருவாக்கப்பட்டது. நான் ஸ்கிரிப்ட்டில் வேறு ஒன்னு வச்சுருந்தேன். ஆனால் அதை ஸ்பாட்டில் அஜித்தா அல்லது கல்யாண் மாஸ்டர். யாரோ கூறினார்கள். அது ஸ்பாட்டில் எடுக்கப்பட்டது.
அஜித், மூன்வாக் ஸ்டேப் அவரே முடிவெடுத்து ஸ்பாட்டில் பண்ணினார். நானோ கல்யாண் மாஸ்டரோ எதுவும் கூறவில்லை. அவரே விருப்பப்பட்டு பண்ணினது தான் அந்த மைக்கேல் ஜாக்சனின் மூன்வாக் ஸ்டேப். பொதுவாக 60s, 70s-ல் உள்ள english பாப் பாடல்களை பற்றி அஜித்திற்கு அதிகமாகவே தெரியும். அதில் நடந்த சுவாரஸ்ய சம்பவங்கள் அனைத்தும் அவருக்கு தெரியும்.
குறிப்பாக அந்த விசில் சத்தமும் 'We Will Rock You' பாட்டின் ஹம்மிங்கயும் அவரே கொடுத்ததுதான். மெயின் ஸ்கிரிப்ட்டிலே அஜித்துக்கு ஒவ்வொரு சண்டை காட்சியில் டான்ஸ் இருக்கும். அதனால்தான் கல்யாண் மாஸ்டரையும் வரவழைத்தோம். அஜித் கதாபாத்திரமே கூலாக பிளான் போடுற ஒரு ஆள்.
எனவே அதற்கு டான்ஸ் தேவைப்பட்டது. இந்த கதைக்கு ஒரு Devil தேவைப்பட்டது. அதற்காக அஜித் கதாபாத்திரம் கட்டமைக்கப்பட்டது. அதனை அவர் நல்லபடியாக செய்து முடித்தார்" என்றார்.