இயக்குநர் ஜேம்ஸ் கேம்ரூன் இயக்கத்தில் கடந்த 1997-ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் டைட்டானிக். இந்த படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின்னர் 11 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2009-ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் அவதார்.
இந்த படம் வெளியாகி மாபெரும் வசூல் வேட்டை செய்தது. அதோடு உலகம் முழுவதும் இந்த படத்தின் வெற்றி சாதனையை தற்போது வரை எந்த படமும் முறியடிக்கவில்லை. இப்படி சாதனை பட்டியலில் தற்போது வரை முதல் இடத்தில் இருக்கும் இந்த படத்தின் அடுத்த பாகம் எப்போது வெளியாகும் என்று அனைவர் மத்தியிலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த 16-ம் தேதி திரையரங்கில் வெளியாகியது.
உலகம் முழுவதும் 2D, 3D, IMAX ஃபார்மட்களில் வெளியாகியிருக்கும் இந்த படத்தை காண ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பையும் பெற்று வருகிறது. உலகம் முழுவதும் வெளியாகியிருக்கும் இந்த படத்தை காண, அதன் ரசிகர்கள் அவதார் கெட் அப் போட்டு வந்து படங்களை பார்த்து ரசிக்கின்றனர்.
அதோடு புதுச்சேரியில் உள்ள திரையரங்கு ஒன்றில், ரசிகர்களை வரவேற்க ஊழியர்களே அவதார் வேடம் அணிந்து வரவேர்த்தனர். இது தொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. நாளுக்கு நாள் இப்படத்தின் வசூல் அதிகரித்து வரும் நிலையில், உலகம் முழுவதும் தற்போது வரை ரூ.8 ஆயிரம் கோடியை (1 பில்லியன் டாலர்) தாண்டி வசூல் சாதனை படைத்துள்ளது.
இந்த படம் மட்டுமல்ல, இது போன்ற சில படங்கள் குறுகிய காலத்திலே ரூ.8 ஆயிரம் கோடி வசூல் சாதனை படைத்துள்ளது. அந்த படங்களின் பட்டியல் இதோ :-
1. 2019-ம் ஆண்டு வெளியான 'Avengers: Endgame' - வெறும் 5 நாட்களில் 8 ஆயிரம் கோடியை தாண்டியது.
2. 2018-ம் ஆண்டு வெளியான 'Avengers: Infinity War' - 11 நாட்களில் 8 ஆயிரம் கோடியை தாண்டியது.
3. 2015-ம் ஆண்டு வெளியான 'Star Wars: The Force Awakens' - 12 நாட்களில் 8 ஆயிரம் கோடியை தாண்டியது.
4. 2021-ம் ஆண்டு வெளியான 'Spider-Man: No Way Home' - 12 நாட்களில் 8 ஆயிரம் கோடியை தாண்டியது.
5. 2015-ம் ஆண்டு வெளியான 'Jurassic World' - 13 நாட்களில் 8 ஆயிரம் கோடியை தாண்டி சாதனை படைத்தது.
6. 2022-ம் ஆண்டு வெளியான 'Avatar: The Way of Water' - 14 நாட்களில் 8 ஆயிரம் கோடியை தாண்டியது.
7. 2015-ம் ஆண்டு வெளியான 'Furious 7' - 7 நாட்களில் 8 ஆயிரம் கோடியை தாண்டியது.
8. 2017-ம் ஆண்டு வெளியான 'The Fate of the Furious' - 18 நாட்களில் 8 ஆயிரம் கோடியை தாண்டியது.
9. 2017-ம் ஆண்டு வெளியான 'Star Wars: The Last Jedi' - 19 நாட்களில் 8 ஆயிரம் கோடியை தாண்டியது.
10. 2009-ம் ஆண்டு வெளியான 'Avatar' - 19 நாட்களில் 8 ஆயிரம் கோடியை தாண்டியது.
- இதன் மூலம் அவதார் படத்தின் முதல் பாக வசூலை விட இரண்டாம் பாகத்தின் வசூல் வேட்டை அதிகரித்து வரும் வண்ணமாக காணப்படுகிறது.