உலகளவில் பிரபலமான சமூகவலைத்தளம் என்றால் அது யூடியூப்தான். கூகுள் நிறுவனத்துக்கு சொந்தமான வலைத்தளமான யூடியூப்பில் எண்ணமுடியாத அளவு கோடிக்கணக்கான விடீயோக்கள் அதில் பதிவேற்றப்பட்டுள்ளன.
இந்த சமூகவலைத்தளத்தில் யார்வேண்டுமானாலும் வீடியோவை பதிவு செய்யாமல் என்பதால் லட்சக்கணக்கானோர் தங்கள் உருவாகும் வீடியோக்களை தினந்தோறும் அதில் பதிவேற்றிவருகின்றனர். அதில் சிலரின் வீடியோக்கள் இணைய பயனர்களால் அதிகம் பார்க்கப்படுவது வழக்கம்.
அந்த வகையில் இந்தியாவில் அதிகம் பார்க்கப்பட்ட வீடியோக்கள் பிரபலமான படைப்பாளிகளின் பட்டியலை யூடியூப் வெளியிட்டுள்ளது. முதல் 10 பிரபலமான வீடியோக்கள், முதல் 10 இசை வீடியோக்கள் மற்றும் முதல் 10 குறும்படங்கள். 2022 ஆம் ஆண்டின் பிரேக்அவுட் கிரியேட்டர்கள், பிரேக்அவுட் வுமன் கிரியேட்டர்கள் மற்றும் அந்த ஆண்டிற்கான ஒட்டுமொத்த முதல் தரவரிசை படைப்பாளர்களையும் YouTube தரவரிசைப்படுத்தியுள்ளது.
இதில் அதிகம் ட்ரெண்ட்டான இசை வீடியோக்களில் தெலுங்கில் வெளியான புஷ்பா படத்தின் பாடல்களே ஆதிக்கம் செலுத்தியுள்ளது. அந்த படத்தில் வெளியான ஸ்ரீவள்ளி பாடல் முதல் இடத்தையும், சாமி சாமி பாடல் மூன்றாம் இடத்தையும், அதேபடத்தில் வெளியான சமந்தா ஆடிய குத்து பாடல் ஹிந்தி பதிப்பு 6-ம் இடத்தையும், தெலுங்கு பதிப்பு 7-ம் இடத்தையும் பெற்றுள்ளது.
இந்த பட்டியலிலும் தமிழ் திரைப்படத்தில் வெளியான ஒரே ஒரு பாடல் மட்டுமே இடம்பெற்றுள்ளது. விஜய் நடிப்பில் அனிருத் இசையமைத்து வெளியான 'அரபிக் குத்து' பாடலின் லிரிகள் வீடியோ இந்த பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்து அசத்தியுள்ளது. அதேபோல 'அரபிக் குத்து' பாடலின் வீடியோ 9-வது இடமும் பெற்றுள்ளது.