கடந்த 2006-ம் ஆண்டு வெளியான 'மாயாஜாலம்' என்ற தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை பூனம் கவுர். 2007-ம் ஆண்டு நரேன் நடிப்பில் வெளியான 'நெஞ்சிருக்கும் வரை' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர், தனது முதல் படத்திலேயே ரசிகர்களை கர்ந்தார்.
மிகப்பெரிய ஹிட் கொடுத்த இந்த படத்திற்கு பிறகு இவர், மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் பல படங்கள் நடித்து வருகிறார். தமிழில் உன்னை போல் ஒருவன், பயணம், வெடி, 6 மெழுகுவர்த்திகள், அச்சாரம், நாயகி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் நடிகை பூனம் கவுர் ஃபைப்ரோமியால்ஜியா (Fibromyalgia) என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதையடுத்து ரசிகர்கள் பலரும் இவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
Fibromyalgia என்ற நோயானது, பரவலான தசைக்கூட்டு வலியுடன் கூடிய சோர்வு, தூக்கம், நினைவாற்றல் மற்றும் மனநிலை மாற்றம் உள்ளிட்ட பிரச்னைகளை கொண்டிருக்கும். இந்த நோயானது மருந்து மாத்திரைகளில் சரிசெய்யக்கூடியவை இல்லை என்பதால் இவருக்கு உடற்பயிற்சி, தெரபிகள் போன்ற சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவில் இருந்த இவருக்கு இந்த நோய் கண்டறியப்பட்டது. மேலும் இந்த அரியவகை நோய் குணப்படுத்த தீரவில்லை என்பதால், இந்த நோய் உள்ளவர்கள் அதனுடேனே வாழ பழகி கொள்ள வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நோய் காணப்பட்டாலும், தனது நடிப்பில் இருந்து சற்று ஓய்வெடுத்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் தெலுங்கு மாநிலங்களில் சமூக செயல்பாட்டாளராக வலம் வரும் இவர், கைத்தறி நெசவாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தும் நோக்கில் ராகுல் காந்தியின் 'பாரத் ஜோடோ யாத்ரா'-வில் பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, தான் மயோசிட்டிஸ் (Myositis) பிரச்னையால் பாதிக்கப்பட்டதாக வெளிப்படையாக கூறினார். தற்போது சமந்தா அதற்கான சிகிச்சையை மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.