சினிமா

“சண்டைக்காட்சியின் போது ஆற்றுக்குள் பாய்ந்த கார்.. சமந்தா, விஜய் தேவர்கொண்டா காயம்?” : நடந்தது என்ன?

சினிமா காட்சியின் போது, சமந்தா, விஜய் தேவர்கொண்டா கார் ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்து ஏற்றப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“சண்டைக்காட்சியின் போது ஆற்றுக்குள் பாய்ந்த கார்.. சமந்தா, விஜய் தேவர்கொண்டா காயம்?” : நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தெலுங்கு சினிமாவில் நின்னு கோரி, மஜிலி, டக் ஜெகதீஷ் படங்களை இயக்கியவர் சிவா நிர்வானா. இவர் இப்போது விஜய் தேவரகொண்டா - சமந்தா நடிப்பில் ஒரு படத்த இயக்கிக் கொண்டிருக்கிறார்.

கபாலி, காலா படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த முரளி இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். ஹ்ருதயம் படத்தின் மூலம் கவனம் குவித்த ஹேஷம் இசையமைக்கிறார். இதனுடைய ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.

தற்போது இப்படத்தின் பெயர் `குஷி' என அறிவித்து, ஃபர்ஸ்ட் லுக்கையும் வெளியிட்டுள்ளனர். தெலுங்கு மட்டுமில்லாமல், தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் வெளியாக உள்ளது இந்த `குஷி'.

இந்நிலையில், இந்த படத்தின் காட்சிகளை எடுப்பதற்காக காஷ்மீர் பஹல்காம் பகுதியில் படபிடிப்பு நடந்துள்ளது. அப்போது ஆற்றின் குறுக்கே இருவரும் காரில் வேகமாக கடந்து செல்வது போன்ற காட்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதுதொடர்பாக வேகமாக வந்த கார் காட்டுப்பாட்டை இழந்த நிலையில், எதிர்பாரா விதமாக ஆற்றிற்குள் தவறு விழுந்துள்ளது. இதனைப்பார்த்த படக்குழு, உடனடியாக விரைந்து சென்று சமந்தா, விஜய் தேவர்கொண்டா ஆகிய இருவரையும் மீட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து இருவருக்கும் முதலுதவி அளிக்கப்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனை அழைத்துச்சென்றதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் படபிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதாகவும், ஊடகங்களில் செய்திகள் கசிந்துள்ளது. சமந்தா, விஜய் தேவர்கொண்டா விபத்து குறித்த தகவல் சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து, ரசிகர்கள் பலரும் நலம் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் விபத்து குறித்து வெளியான தகவல் போலியானது என ரமேஷ் பாலா என்ற பி.ஆர்.ஓ ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இப்போது படப்பிடிப்பு தளத்தில் விபத்து நடந்தது உண்மையா இல்லையா என்பது குறித்து படக்குழு தான் விளக்க வேண்டும் என ரசிகள் பலரும் கூறி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories